திருக்குறள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மலச்சிக்கல் தீர மேலும் சில எளிய வழிகள்


1. இரவு படுக்கைக்குச் செல்லும் போது பழுத்த
வாழைப்பழம் ஒன்றும் சூடான பால் ஒரு குவளையும்
அருந்துவது.

2. மாவடு இரண்டு அல்லது மூன்றினை தேனுடனும்
உப்புடனும் கலந்து தின்பது.

3. பச்சை மாங்காயை நறுக்கி உப்பிட்டுத் தின்பது.

4. 2 தேக்கரண்டி இஞ்சிச் சாற்றுடன் 25 மி.லி.
தயிரும் 50 மி.லி. மாம்பழச்சாறும் சேர்த்துப் பருகுவது.

5. சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறும் சிறிதளவு
உப்பும் தேனும் கலந்து பருகுவது.

6. ஒன்று அல்லது இரண்டு வெள்ளைப் பூண்டைச்
சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி உண்பது.

7. ஒரு குவளை தக்காளிச் சாற்றில் சிறிதளவு உப்பும்
அரைத் தேக்கரண்டி மிளகுத்தூளும் கலந்து பருகுவது.

8. ஒரு கண்ணாடிக் குவளை தண்ணீர் ஒரு இரண்டு
மேஜைக் கரண்டி அளவு கிஸ்மிஸ் பழத்தை இரவு
முழுவதும் ஊறவைத்துக் காலையில் உண்பது.

9. காலையில் எழுந்ததும் ஒரு பெரிய குவளை பால்
சேர்க்காத சூடான கடுங்காப்பி அருந்துவது


10. காலை எழுந்ததும் இரண்டு பெரிய குவளை
தண்ணீர் அருந்துவது.

-

கருத்துகள் இல்லை: