சினைப்பை (சூலக) நீர்க்கட்டி சிறப்பு சிகிச்சை
Poly (பாலி) என்பது பல
Cyst (சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி.
OVARY (ஓவேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம்.
Disease (டிஸீஸ்)என்பது நோய்.
ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கரு முட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம் நடைபெற்று குழந்தை உருவாகிறது.
ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதே Poly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.
Poly Cystic Ovarian Disease ஆனது பல அறிகுறிகளை (Syndrome) உருவாக்குகிறது. அந்த அறிகுறிகள் Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்று அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
Ø குழந்தையின்மை - சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள் பரவலாக காணப்படுவதால் சினை முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.
Ø ஹார்மோன் குறைபாடு - சூலக நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் தன்மை ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.
Ø ஒழுங்கற்ற மாதவிடாய் - சூலக நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது. 2 - 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும். சிலருக்கு இரத்தப்போக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு மிகுதியாக இருக்கும்.
Ø முகத்தில் முடி வளர்தல் - ஆண்மைத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது. உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடி வளரலாம்.
Ø நிற மாற்றம் - உடலில் சில இடங்களில் (கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம் அதிகரித்து காணும்.
இந்த அறிகுறிகள் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் என்றில்லை. சூலக நீர்க்கட்டிகள் இருக்கும் போதே குழந்தைகள் பல பெற்ற பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பின்பு கூட சூலக நீர்க்கட்டிகள் வரலாம்