திருக்குறள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை!

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை!

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.

அதிகம் சிந்தித்தால் உடல் பருமன் கூடலாம்.



அதிகம் சிந்தித்தால் உடல் பருமன் கூடலாம்.

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது ஏற்படாது. அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும், சிந்தனைத் திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தனர். நமது மூளை சிந்திப்பதற்கு ஏராளமான சக்தி செலவாகின்ற போதிலும், உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இந்நிலையில் அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்பு காரணமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அதாவது நாம் சிந்திக்கும்போது அதிக சக்தி செலவாவதால், பசி அதிகமாக எடுக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். இதன் விளைவாக உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது. இதுகுறித்து பலரிடம் ஆய்வு செய்து பார்த்தபோது, புத்தகங்களை படித்த பிறகு, மூளைக்கு வேலையளிக்கும் கம்ப்ïட்டர் விளையாட்டுகளில் ஈடுபட்ட பிறகு, அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது தெரிய வந்தது.

இந்த உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்ப வேண்டுமானால், மன அழுத்தம் ஏற்படுகிற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில் இருக்கும் ஆய்வு நிபுணர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

பண்டய கால அழகு கலைகள்

PhotoPhoto

இன்றும் பல நாகர நாகரீகங்கள் பண்டய காலத்தை தழுவியே அமைந்துள்ளது இவை அனைத்தும் குத்தூசி மருத்துவ மான அக்குபஞ்சர் மருத்துவத்தை தழுவி அமைந்துள்ளது.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

கல்தாமரை கோடியின் மருத்துவ குணங்கள் :

கல்தாமரை கோடியின் மருத்துவ குணங்கள் :-

கல்தாமரை மலைப்பகுதியில் வளரும் ஒருவகை கொடி இனமாகும். இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். ஆனால் தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும்.

இதன் இலை மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

உட்கொள்ளும் மருந்துகள், வெளிப்பூச்சு மருந்துகள் மற்றும் தைல வகைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது.

உடல் வலுப்பெற

உடல் வலுப்பெற்றால் நோய்கள் ஏதும் அணுகாமல் பாதுகாக்க முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப உடல் நன்கு பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய உடலை வலுப்பெறச் செய்ய கல்தாமரை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். அல்லது காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து அருந்தலாம். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இளைத்த உடல் தேறும்

இடுப்பு வலி தோள்பட்டை வலி நீங்க

இன்றைய நவீன உணவு மாறபாட்டாலும், போதிய உற்பயிற்சியின்மையாலும் சிலருக்கு மிகக் குறைந்த வயதிலே கழுத்துவலி, இடுப்பு வலி, மூட்டு வலி, என உண்டாகிறது. இப்படி கை, கால், முட்டுகளில் வலி உண்டாவதற்குக் காரணம் மூட்டுத் தேய்மானம் என்பார்கள். இதனைப் போக்க கல்தாமரை சிறந்த மருந்து. கல்தாமரை இலைகளை நிழலில் காயவைத்து கஷாயம் செய்து அருந்தி, கல்தாமரை இலைகள் சேர்க்கப்பட்ட வெளிப்பூச்சு எண்ணெய்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசி வந்தால் மேற்கண்ட பாதிப்புகள் நீங்கும்.

நரம்புகள் வலுப்பெற

நரம்புகளில் நீர் கோர்த்துக்கொண்டு நரம்பு வறட்சி உண்டானால் அது நரம்புப் பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இத்தகைய குறையைப் போக்கி நரம்புகளை வலுவடையச் செய்ய கல்தாமரையிலை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. அல்லது கல்தாமரை இலை பொடியில் தேன் கலந்து அருந்தலாம்.

ஆண்மை பெருக

இன்றைய பொருளாதார சூழ்நிலையால் மன அழுத்தம் உண்டாகி பலருக்கு வீரியக்குறைவு உண்டாகிறது. குழந்தைப்பேறு இன்றி தவிக்கின்றனர். சிலர் திருமணத்திற்குப் பின் வீரியக் குறைவால் அவதிப்படுகின்றனர். இக்குறையைப் போக்க பல விளம்பரங்களைத் தேடி அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உண்டும் பயனில்லாமல் வேதனையுறுகின்றனர். இவர்கள், கல்தாமரை இலைப் பொடியை பாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் ஒரு மண்டலம் அருந்தி வந்தால் வீரியக் குறைவு நீங்கி ஆண்மை பெருகும்.

சருமத்தைப் பாதுகாக்க

கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி நீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கு

புதன், 5 பிப்ரவரி, 2014

சர்க்கரை நோய்க்கு வீட்டில் இருக்கு மருந்து



சர்க்கரை நோய்க்கு வீட்டில் இருக்கு மருந்து


சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை நாம் சர்க்கரைநோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம்.

இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய,அமெரிக்கவிஞ்ஞானிகள். ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் செடியின் இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடையலாம்..

இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!



இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!


வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

எப்போது அழகாக இருக்க எளிய வழி



எப்போது அழகாக இருக்க எளிய வழி


சிலரை பார்த்தால் ப்ரிட்ஜில் வைத்த அப்பிள் பழம் போல எப்போதும் ப்ரெஷ் ஆக இருப்பார்கள் இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த மூஞ்சுடன் இருப்பார்கள்.

இப்படி இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பும் மிஸ் ஆகி தான் இருப்பதோடு அவர்களின் அழகும் காணாமல் போய்தான் இருக்கும். இவ்வாறு அழகை வைத்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர்.

அந்த ஆய்வு இயற்கை அழகு யாருக்கு கிடைக்கும் என்ற கோணத்தில் அமைந்து இருந்தது. 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாக இருப்பவர்களை காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் ப்ரெஷ் ஆகவும் அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. இந்த மனதை இயற்கையாக அதாவது டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும். என்று தெரிவித்தனர்.

என்ன நீங்களும் டென்ஷன் பார்ட்டி என்றால் இப்பவே உங்களை டென்ஷனை தூக்கி எறிந்து விடுங்கள். இல்லையெனில் அழகு உங்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடும்.