திருக்குறள்

திங்கள், 17 மார்ச், 2014

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு

 இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.


காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.


காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.


காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் 

நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.


மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.


இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.


இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.


இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.


இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

வியாழன், 13 மார்ச், 2014

தாமிரம் தரும் சுத்தமான குடிநீர்


முன்னோர்களின் கூற்றுப்படி தாமிரம் தரும் சுத்தமான குடிநீர்

அன்றைய தினம் வாழ்ந்த யோகிகள் மற்றும் ரிஷpகள் கமெண்டலம் என்ற சிறிய செம்பு பாத்திரம் வைத்திருந்ததை காணலாம் அதில் நீரை ஊற்றி வைத்திருந்து சில மணி நேரங்களுக்கு பின்னரே அதனை பருகியும் வந்துள்ளனர் நமது வீடுகளில் முன்னோர்கள் பயன் படுத்திய பாத்திரங்களில் அதிகமாக தாமிர பாத்திரங்களே இருந்தது அதற்கு அடுத்தாற்போல் தண்ணீர் பிடிக்க பயன் படுத்தியது தாமிர முலாம் பூசப்பட்டவெண்கலப்பாத்திரங்கள் ஆனால் அவை இன்று எத்துனை வீடுகளில் பயன் படுத்துகிறோம் .. பயன் படுத்துவதால் மினரல் வாட்டர் செலவு மிச்சம் .

கேன் வாட்டர்இ மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால்இ ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும்இ அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்கஇ செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுலஇ 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில்இ மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணிஇ செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க'' என்ற தகவல்களை பல அறிஞர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

நீர்ப்பிரமி கொடியின் மருத்துவ குணங்கள்!






நீர்ப்பிரமி கொடி
யின் மருத்துவ குணங்கள்!

நீர்ப்பிரமி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

இது இனிப்பு, துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது.

நீர் பிரம்மி செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும், Bacoside A, Bacoside B ஆகிய குளுக்கோசைடுகளும் உள்ளன.

நினைவாற்றலைத் தூண்ட

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி ஒரு பெரும்பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஞாபக மறதி ஒரு தொற்று நோய்க்குச் சமமாகும். இதனை போக்கும் அருமருந்துதான் நீர்பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

நரம்புத் தளர்வு நீங்க

மூளையை தலைமையிடமாகக் கொண்டு உடலெங்கும் பின்னிப் பிணைந்து காணப்படும் நரம்புகள்தான் மனித செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாகின்றன. இந்த மெல்லிய நரம்புகளில் சில சமயங்களில் மன அழுத்தம், கோபம் காரணமாக அங்காங்கு நீர் கோர்த்துக்கொள்ளும். மேலும் வெப்பப் பகுதியில் வேலை செய்பவர்களின் நரம்புகளும் பாதிக்கப்படும். நரம்புகள் பலமாக இருந்தால்தான் உடல் புத்துணர்வுடன் செயல்படும். இத்தகைய நரம்பு தளர்வு நீங்க பிரம்மி இலைகளை உலர்த்தி கசாயம் செய்து அருந்திவருவது நல்லது.

சிறுநீர் பெருக

ஒரு மனிதன் ஆரோக்கியமாக செயல்பட அவன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். அதுபோல் அவன் தினமும் 1 லிட்டர் முதல் 1 1/2 லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். சிறுநீர் சீராக வெளியேறினால் தான் உடலில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். இவை வெளியேறாமல் நின்றுவிட்டால் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு சிறுநீர் வெளியேறாமல் நீர் எரிச்சல் உண்டாகும். இவர்கள் நீர்ப்பிரம்மி இலைகளை கசாயம் செய்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

மலச்சிக்கல் நீங்க

மலச்சிக்கல், மனச்சிக்கல் ஆதி நோய்கள். மலச்சிக்கலைப் போக்கினாலே உடல் ஆரோக்கியம் பெறும். சிலருக்கு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு சாப்பிட்டாலும் மலம் எளிதில் வெளியேறாது.

இவர்கள் நீர்பிரம்மி இலைகளை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

நீர்பிரம்மி இலைகளை சாறு பிழிந்து நெய் சேர்த்து காய்ச்சி கொடுத்து வருதல் நல்லது அல்லது நீர்பிரம்மி சாறுடன் 8 கிராம் கோஷ்டத்தை பொடித்து சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் புளிச்ச ஏப்பம் நீங்கும்.

நல்ல குரல்வளம் கிடைக்க

நீர்பிரம்மி இலைகளை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கம்மல் தீருவதுடன் நல்ல குரல்வளம் கிடைக்கும்.

உச்சரிப்பு சரிவராத குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். இதன் வேரை அரைத்துக் கொதிக்க வைத்து நெஞ்சில் பூச கோழைக்கட்டு நீங்கும்.

நீர்பிரம்மி இலைகளை சிற்றாமணக் கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு அதையே அவ்வீக்கங்களின் மீது வைத்துக் கட்டிவர வீக்கங்கள் கரையும்.