திருக்குறள்

வியாழன், 26 செப்டம்பர், 2013

இதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்.!

இதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்.!
 


பைபாஸ் ஆப்ரேசன் இன்று மிகவும் பிரபலமான ஆபரேசன்ளில் இதுவும் ஒன்று. இரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்க செய்யப்படும் பெரிய அறுவை சிகிச்சையாகும். மார்பு பகுதி பெரிய எலும்பை அறுத்து அகற்றி இதயத்தையும் நுரையீரலையும் பைபாஸ் கருவிக்கு மாற்றி இதயத்தின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி செய்யப்படும் ஆப்ரேசன் தான் பைபாஸ் ஆப்ரேசன். இதற்காக காலில் உள்ள சிரை அல்லது மார்பிலுள்ள தமனி பைபாஸ் செய்யப் பயன்படுத்துகின்றது. சிரையின் ஒரு பகுதி பெருந்தமனியுடன் (AORTA) இணைக்கப்பட்டு மற்றொரு பகுதி இரத்த குழாயிலுள்ள அடைப்புக்கு அடுத்து இணைக்கப்படுகின்றது. சிகிச்சை முடிந்து இதயம் இயங்க செய்யப்பட்டு மார்பு பகுதி மூடப்படுகின்றது. சாதாரணமாக இந்த ஆப்ரேசன் செய்து கொண்டவர்கள் 10 நாட்கள் மருத்துவமனையிலும் 3 மாத ஓய்வுக்குப் பிறகு சாதாரன வாழ்க்கையை தொடங்களாம்.
இப்படிப்பட்ட ஒரு ஆபரேசனை செய்து கொண்டவர்தான் ENGG. காலித் எஹ்சான் பாரி (KHALID EHSAN PARI) வயது 52 MEDICAL CONSULTANT FILE NO.13390.
இவர் பைபாஸ் சர்ஜரியை ரியாத்தில் ஒரு பிரபலமான மருத்துவமனையில் செய்து கொண்டர். ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்து வீடு திரும்பினார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தில் பிரச்சினை ஏற்படவே டாக்டரை சந்தித்தார். பல சோதனைகளுக்குப் பிறகு இரத்த குழாயில் மீண்டும் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டிருக்கின்றது. மீண்டும் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறவே இவர் இரண்டாவது பைபாஸ் சர்ஜரியை ரியாத்தில் செய்ய மனமில்லாமல் இங்கிலாந்து சென்று லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற டாக்டரிடம் (நாகரிகம் கருதி பெயர் மறைக்கப்படுகின்றது) பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டார், நலமாக வீடு திரும்பினார்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்கவே மீண்டும் பரிசோதனை செய்ததில் இரத்த குழாயில் அடைப்பு மறுபடியும் உருவாகியிருப்பது தெரிய வந்தது. இந்த முறையும் டாக்டர்கள் பைபாஸ் சர்ஜரி செய்யச் சொல்லவே அவர் மனம் உடைந்தார்.

பிரபலமான செல்போன் கம்பெனியில் புதிய பொறியாளர்களுக்கு எல்லாம் பயிற்ச்சியளிக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் கம்பெனி சலுகையை பயன்படுத்தி இரண்டு முறை ஆபரேசன் செய்தும் கொழுப்பு கரைக்கும் மாத்திரைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தும் மீண்டும் மீண்டும் பைபாஸ் சர்ஜரி பிரச்சினை வந்ததால் மனம் வேதனையடைந்தார்.

இதற்கிடையில் கடுமையான இடுப்பு வலியால் பாதிக்கப்படவே அக்குபங்சர் பற்றி அறிந்து மருத்துவமனையில் (Medical Consultant MC)என்னை சந்தித்தார்.

அக்குபஞ்சர் என்றாலே வலியை மட்டும் தான் போக்கும் என்ற தவறான செய்தியை மட்டுமே உலகம் நம்பிக் கொண்டிருக்கின்றது. இவரும் அதே மன நிலையிலேயே என்னை சந்தித்தார்.

இடுப்பு வலிக்காக வந்தவரிடம் விவரம் கேட்ட போது மேற்சொன்ன விவரத்தை கூறினார். நான் அவரிடம் கவலைப்பட வேண்டாம். இடுப்பு வலியும் சரியாகும் பைபாஸ் சர்ஜரியும் தேவையில்லை என்று சொன்ன போது அவருக்கு நம்பிக்கை இல்லை. இடுப்பு வலி மட்டும் குணமானால் சரி என்ற அடிப்படையிலேயே டிரீட்மென்டை தொடர்ந்தார்.

15 நாள் இடைவெளியில் 2 டிரிட்மென்ட் கொடுத்ததால் இடுப்பு வலி சரியானது, மீண்டும் 3 டிரிட்மென்ட் கொடுத்ததால் அவர் பிரச்சினை எல்லாம் தீர்ந்தது (அல்ஹம்துலில்லாஹ்). பரிசோதனை செய்து பார்த்ததில் இரத்த அழுத்தம் (BLOOD PRESSURE) நார்மல், இரத்த குழாயில் அடைப்பும் இல்லை. மீண்டும் ஒரு பைபாஸ் சர்ஜரி தவிர்க்கப்பட்டது (இறைவன் மகா பெரியவன்;). 5 டிரிட்மென்டுக்கு எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை மாதம் (ஒரு டிரிட்டிமென்டுக்கும் அடுத்த டிரிட்மென்டுக்கும் இடைவெளி 15 நாள்).
என்ன நடந்தது:

பைபாஸ் சர்ஜரி மூலம் அடைப்பு நீக்கப்படுகின்றது, அடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு அது சரி செய்யப்படவில்லை.அதனால் அவருக்கு மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை தோன்றியது.

அக்கு பஞ்சர் நாடி பரிசோதனை மூலம் அடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்த போது நோயின் காரணமும் சரி செய்யப்பட்டது. அது உண்டாக்கிக் கொண்டிருந்த விளைவாகிய அடைப்பும் நீங்கிவிட்டது. அக்கு பஞ்சர் மருத்துவம் நோயின் விளைவையும் நோய் ஏற்படுவதற்கான காரணத்தையும் வேரோடு களைகின்றது.

எந்த ஒரு நோயும் அது தோன்றியதற்கான காரணம் கண்டறியப்பட்டு வேரோடு களையப்பட வேண்டும். அப்படியில்லாமல் நோயின் காரணத்தை விட்டுவிட்டு விளைவுகளை சரிசெய்வது தற்காலிக சுகத்தை தரலாமே ஒழிய நிரந்தர தீர்வை தர இயலாது.

இப்படி ஒரு நிரந்தர டிரிட்டிமன்ட் எடுக்காத காரணத்தால் தான் இன்று காலித் போன்று பலர் பல இலட்சங்களை இழந்தும் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்கள்.

வயிறும் மண்ணீரலும் (அது தொடர்புடைய மற்ற உறுப்புகளும்) ஒழுங்காக இயங்குமானால் கொழுப்பு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை (இன்ஷா அல்லாஹ்). காலிதின் வயிறும் மண்ணீரலும் நாடி மூலம் கண்டறிந்து ஒழுங்காக சீராக இயங்க வைக்கப்பட்டதன் மூலம் கொழுப்பு அடைப்பு நீங்கியது. இதயம் சீராக சிறப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது. இது வரை சாப்பிட்டு வந்த கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த மாத்திரைகள் இனி அவருக்கு தேவையில்லாமல் போய்விட்டது.நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வள்ளுவன் வாக்கை மாறாமல் பின்பற்றும் மருத்துவம் தான் அக்குபஞ்சர்.
எச்சரிக்கை:

அக்குபஞ்சர் என்றதும் கண்ணை மூடிக் கொண்டு டிரிட்மென்ட் எடுக்காமல் எந்த முறையில் டிரிட்மென்ட் செய்கின்றார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு டிரிட்மென்ட் எடுப்பது நல்லது.

பாரம்பறிய அக்குபஞ்சர் (CLASSICAL ACUPUNCTURE) அல்லது ஆரம்ப கால முறை

நவீன முறை (MODERN ACUPUNCTURE)

இதில் பாரம்பறிய (CLASSICAL ACUPUNCTURE) அக்குபஞ்சரே சிறந்தது. காரணம் இதில் நாடியை அறிந்து தகுதியான இடங்களில் சிகிச்சையளிக்கப்படுகின்றது. அடிக்கடி டிரிட்மென்ட் தேவையில்லை. 10 அல்லது 15 நாளைக்கு ஒரு முறை மாதம் ஒரு முறை டிரிட்மென்ட் எடுத்து வந்தாலே நோய் நிரந்தரமாக நலமாகும்.

நவீண முறையில் தினம் ஒரு முறை அல்லது இரு முறை தொடர்ந்து பல தினங்கள் டிரிட்மென்ட் எடுக்க வேண்டும். ஏகப்பட்ட ஊசிகளை பயன்படுத்துவார்கள், நாடிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நோயாளியின் வாய் மொழி கேட்டே சிகிச்சையை தொடங்குவார்கள்.நாடி பார்த்தாலும் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஊசிகளை அதிகம் பயன்படுத்துவார்கள், ஊசிகளை உடம்பில் அதிக நேரம் வைத்திருப்பார்கள்.

ஆங்கில (மற்ற) மருத்துவத்தில் தலைவலி என்று சொன்னால் அதைப் பற்றி ஆராயாமல் உடனே பாராசிட்டமால் மாத்திரைகளை எழுதி தருவது போல் நவீன அக்குபஞ்சரில் காரணத்தை ஆராயாமல் முன் கூட்டியே லிஸ்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் சிகிச்சையளிப்பார்கள்.

பாரம்பறிய அக்குபஞ்சரில் அதிக ஊசிகள் தேவையில்லை நாடியே முக்கியத்துவம் என்பதால் ரிப்போர்ட்கள் தேவையில்லை, ஊசிகள் அதிகம் பயன்படுத்துவதில்லை, அதிக நேரம் ஊசி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை, அடிக்கடி டிரிட்மென்ட் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

இதனால் அனைத்து நோய்களையும் நாடியைக் கொண்டே தீர்க்க முடிகின்றது.பாரம்பறிய அக்குபஞ்சரே (CLASSICAL ACUPUNCTURE) மிகவும் சிறந்தது. பைபாஸ் சர்ஜரியை தவிர்க்க காலித் அவர்களுக்கு அளிக்கப்பட்டது கிளாசிக்கல் அக்குபஞ்சர் என்னும் பாரம்பறிய அக்குபஞ்சரே.

இந்த கட்டுறையில் இதை முக்கியத்துவம் கொடுத்து எழுத காரணம் இதய நோய் முக்கியமானது. இந்த கட்டுரையை படித்துவிட்டு யாராவது விவரம் அற்றவர்களிடம் சிகிச்சை பெற்று பின்னால் பிரச்சினை ஏற்பட்டு அக்குபஞ்சருக்கோ எனக்கோ தவறான பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதில் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கின்றேன். சரியான அக்குபஞ்சரை தேர்ந்தெடுக்க இனி உங்களால் முடியும், இன்ஷா அல்லாஹ்.

இனி இதயம் கட்டுரை தொடருக்கு வருவோம். இதய ஆபரேசன்களில் சிலவற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வது பல வகையில் நமக்கு நன்மையளிக்கும். எனவே அவைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

1. ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM)

உடம்பில் குறிப்பிட்ட இடங்கள் மரத்து போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப்படுகின்றது.பிறகு DYE-ஐ இதற்காக செய்யப்பட்ட CATHETER மூலம் இரத்த குழாயில் செழுத்தி புகைப்படம் மூலம் பதிவு செய்யப்படுகின்றது. அந்த புகைப்படங்கள் மூலம் அடைப்பு இருக்கின்றதா என்பதை தெரிந்துக் கொள்கின்றார்கள்.

2. ஆன்ஜியோ பிளாஸ்டி (ANGIO PLASTY)

ஆன்ஜியோ பிளாஸ்டி என்பது ஆன்ஜியோகிராமை தொடர்ந்து செய்யப்படும் சிகிச்சை. இதற்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட மிக நுன்குழாய் இரத்த குழாயில் வைத்து GUIDE WIRE செழுத்தப்பட்டு பலூனை இரத்த குழாயின் அடைப்பின் குறுக்கே வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிது படுத்தப்படுகின்றது. இதனால் அடைப்பு நீக்கப்பட்டு இரத்த ஓட்டம் ஏற்படுகின்றது.

சில நேரங்களில் STENT என்னும் உலோக குழாய் சுருளை இரத்த குழாய் அடைப்பு பகுதியில் வைத்துவிடுவார்கள். இதனால் இரத்த ஓட்டம் சீராக சென்றாலும் பலருக்கு இதனால் காய தழும்பு ஏற்பட்டு தசை தடிமனாக மாறி மீண்டும் இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டுவிடுகின்றது.

மேற்சொன்ன முறைகளும் இது போன்றவைகளும் நோயின் விளைவை அழகாக நீக்குகின்றன தற்காலிகமாக. நோயை மட்டும் விட்டுவிடுகின்றன அனாதையாக.

நோயின் மூல காரணம் சரி செய்யப்படாத வரை நோயின் விளைவை மட்டும்; நீக்குவது தற்காலிக தீர்வு தான். வேரோடு நோய் களையப்பட வேண்டும் அது தான் நோயை நிரந்தரமாக நீக்கி நோயின் விளைவுகளிலிருந்தும் நம்மை நிரந்தரமாக காக்கும்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்
 

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100


ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

தாழம்பூ மணப்பாகு..!

தாழம்பூ மணப்பாகு..!

தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி, தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு. இதனை ஒரு ‌தே‌க்கர‌ண்டி அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம்.

தாழ‌ம்பூ மண‌ப்பா‌கினை வெ‌யி‌ல் கால‌ங்க‌ளி‌ல் ‌தினச‌ரி உபயோ‌கி‌த்து வர அ‌ம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.

இதே‌ப் போ‌ன்ற மண‌ப்பாகை தாழ‌ம்பூ வே‌ரினை‌ப் பய‌ன்படு‌த்‌தி செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு உ‌ட்கொ‌ண்டு வர சொ‌றி, ‌சிர‌ங்கு, ‌தினவு, தோ‌ல் நோ‌ய்க‌ள் குணமாகு‌ம்.

தலைவலிக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்.!

தலைவலிக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்.!
 
 

தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் சுற்றி இறுக்குவது போன்றோ காணப்படும்.

சீஸ், சாக்லேட், எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளுட்டோமைட்) சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணுவதால் 'ஒற்றைத் தலைவலி’ (Migraine) ஏற்படுகிறது. முதலில் தலையின் ஒரு புறத்தில் 'தெறிப்பது’ போல ஏற்பட்டு, தலை முழுவதும் பரவும். தலைவலி வருவதற்கு முன்பே அறிகுறி (Aura) தோன்றும்.

இதைத் தவிர சைனஸ் பிரச்னையாலும், மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பும், காய்ச்சலினாலும் தலைவலி வரலாம். மூளைக் கட்டி, மூளை நோய்கள், பக்கவாதம், மூளை ரத்தக் குழாய்களின் அமைப்பில் குறைபாடுகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற முக்கியமான நோய்களின் வெளிப்பாடாகவும் தலைவலி காணப்படுகின்றது.

தலைவலிக்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதாலும், சரியான நேரத்தில் உணவு உண்ணுதல், சரியான நேரத்தில் தூங்குதல், மதுபானம், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளுதல் போன்றவை தலைவலிக்கான சாத்தியங்களைக் குறைக்கும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

சித்தரத்தை, கசகசா சம அளவு எடுத்துக் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து உண்ணலாம்.

1 கிராம் வெள்ளை சங்குபுஷ்பத்தின் வேர்ப்பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.

புதினா இலைப்பொடி, ஓமம் சம அளவு கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

அவரை இலைச் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறி அதில் கொட்டைப்பாக்களவு உண்ணலாம்.

நன்னாரி வேர், வெட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்துக் கற்கண்டு சேர்த்து உண்ணலாம்.

கொத்தமல்லி விதை, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து, நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.

சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி வற்றல் சம அளவு எடுத்துப் பொடித்து, சர்க்கரை சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

கருஞ்சீரகப் பொடியுடன் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு உண்ணலாம்.

அமுக்கரா, வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் பாலில் கலந்து பருகலாம்.

கழற்சிப் பருப்பு, சுக்கு சம அளவு பொடித்து அதில் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்ந்து உண்ணலாம்.

ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறுடன், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.

வாய்விடங்கம், தும்பை இலை சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்துக் கற்கண்டு சேர்த்து உண்ணலாம்.

வெளிப் பிரயோகம்:

கொத்துமல்லி விதையை சந்தனத்துடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

சுக்கை, தாய்ப்பால் விட்டு அரைத்துப் நெற்றியில் பூசலாம்.

நந்தியாவட்டைப் பூவை நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

குங்குமப்பூவை தாய்ப்பாலில் அரைத்து நெற்றியில் பூசலாம்.

கிராம்பை நீர்விட்டு மையாக அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டிலும் பூசலாம்.

சாம்பிராணி தைலத்தைப் பூசலாம்.

சித்திர மூல வேரைப் பஞ்சு போல இடித்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலைக்கு தடவலாம்.

செம்பைப் பூவை நல்லெண்ணயில் விட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்க்கலாம்.

வால் மிளகைப் பன்னீரில் அரைத்து நெற்றியில் பூசலாம்.

சேர்க்கவேண்டியவை:
பிளம்ஸ், மாதுளை, அன்னாசி, கீரைகள், முளைவிட்ட தானியங்கள்.

தவிர்க்கவேண்டியவை:
துரித வகை உணவுகள், தயிர், எண்ணெய், பலாப்பழம், கொய்யா, சீதாப்பழம்.

ஆர்கானிக் உணவுகள்

ஆர்கானிக் உணவுகள்


வேம்பை பூச்சிக் கொள்ளியாய், கொழுஞ்சியை உரமாய் இயற்கையை மட்டுமே நம்பியிருந்த விவசாயத்தை, பசுமை புரட்சி என்று சொல்லி பாமரர்களை ஏமாற்றி அயல்நாட்டில் தயாரித்த உரங்களையும், பூச்சிக் கொள்ளிகளையும் இங்கே விவசாயிகளுக்கு கொடுத்துவிட்டு,.. இப்போது "ஆர்கானிக் உணவுகள்" என்ற பெயரில் நம்முடைய பழைய விவசாய முறைகளின் படி தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை நம்மிடமே விற்க வந்திருக்கின்றார்கள்.

உப்பு: இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா?அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு.
உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில்,உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

ரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.

அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய்.

ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி: வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி,இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால்,ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி: அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி, பழங்கள்: உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட,செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்: பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ: இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே,உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது.

தோழர்களே ஒன்றினைவோம், விவசாயிகளைக் காப்பாற்றி நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம்.

சேரில் கால்பதித்து நாற்றை கையிலெடுத்து நட்டுவைத்த உழைப்பாளிகளே! உங்கள் வியர்வையில் விழைந்தவைகளை உண்டு நாங்கள் செழித்திருக்கிறோம் நீங்கள் கருத்திருக்கிறீர்கள்!....

உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்

உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்


உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர்.

கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை..கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள்.

நாம் உன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது. புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்ப நிலை, வாத நோய்களை போக்கவல்லது. பசியை ஊக்குவிக்கும் ஈக்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா. மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா, போன்றவை மருத்துவ குணம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.

அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில், புரதம், சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் நியாசிக் போன்றவை பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. எண்ணெய், நெய்விடாத சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும். குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி . நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.

நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்னை ஆற்றும். இருமலைத் தணிக்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்.

உணவும் மருந்தும்...

உணவும் மருந்தும்...

எண்ணிலடங்கா அதிசியத்தையும், ஆச்சர்யத்தையும் நமது சித்தர்கள் நமக்கு காட்டிசென்றுள்ளனர். உணவே மருந்தாகச் செய்து நமது வாழ்வை ஆரோக்கியமாக வாழ வழி செய்தனர். சித்தர்களின் வழியை தற்போதைய அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அதில் ஒன்றுதான் நாம் பார்க்க இருப்பது.

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்

இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

ஒரு சிறிய விஷயத்தில் இத்தனை நல்லனவற்றை வைத்த சித்தர்கள் வாழ்க. அனால் இதை அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர் என்பதே விடைதெரியாத கேள்வி.