திருக்குறள்

சனி, 25 டிசம்பர், 2010

சிக்கன் அதிர்ச்சி report

சிக்கன் 65? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.....!
என்ன நேத்து முட்டை, இன்னிக்குச் சிக்கனான்னு கேக்காதீங்க, அது காமெடி, இது
சீரியஸ், படுசீரியஸ் மேட்டர். பெரியவர் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும்
சிக்கன் 65க்கும் இப்போது பிரச்சனை. நேற்று எனக்கு வந்த மெயிலை அப்படியே
தந்திருக்கிறேன்.



ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள்
சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம்
மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப்
பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான்
உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65
இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று
இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது
கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன்
சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு
முழுக்காரணம்.


இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக்
கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக்
கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள்
பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு
ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.



உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை
நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப்
பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு.
அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை
யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட
அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான்.
எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின்
அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும்
இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி
கிடையாது.


பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும்.
பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த
மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க்,
பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ
ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.


கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது.
ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து
இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்
மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப
வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம்
செய்கின்றனர்.


சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத
செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை,
மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று
இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட்
கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர்,
சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.


கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத்
தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை
எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும்
கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து
வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத்
தப்பி விடுகின்றனர்.


உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது:
ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த
ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த
பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத்
தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக
சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி
கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது
வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின்
கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார
அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம்
மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில்
கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக்
கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு
விடும்.


எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து
கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி
வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக்
குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும்
கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க
முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில்
வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில்
தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த
சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?


கேன்சர் ஆபத்து!
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம்
கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு
எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச்
சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும்.
தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து
சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில்
புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள்
ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்.


பி.கு.:
என்ன நண்பர்களே....அதிர்ச்சியாக உள்ளதா? இந்த மேட்டர், ஏதோ பத்திரிக்கையிலோ,
பதிவிலோ வந்தது போலத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், எழுதியவர்களுக்கும்
பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. இதையும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து
கொள்ளுங்கள்.

இந்தியாவில் உணவுக்கான வண்ணங்கள் அளவு மீறிப் பயன்படுத்தப்படுவதும், தடை செய்யப்
பட்ட வண்ணங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இது சரியான முறையில்
கண்காணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. சிறு நகரங்களில் இது இன்னும்
கேள்விக்குரியது.

இந்நிலையில் நாம்தான் எச்சரிக்கையோடு பளிச்சென்று வண்ணங்கள் நிறைந்த
உணவுப்பொருட்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கோபி மன்சூரியன், பஜ்ஜி, சில்லி
சிக்கன் போன்றவை மீதும் எனக்கு சந்தேகம் உண்டு.

மேலதிக தகவல்களுக்கு, விக்கியிலோ, கூகிளிலோ சென்று பார்க்கலாம். பிபிசி மற்றும்
இங்கிலாந்தின் ஃபூட் சேஃப்டி ஏஜென்சியின் செய்தி அறிக்கைகளையும் பாருங்கள்.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

சித்த மருத்துவம் தென்னிந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. ‘சித்தம்’ என்ற சொல்லானது ‘முக்தி பெறுவது’ ‘முழுமை’, ‘அடையப்படவேண்டிய பொருள்’ ‘சித்தி’ என்ற முலச் சொல்லில்லிருந்து பிறந்த்தாகும்.

சித்த மருத்துவத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும், முழுமையான நிறைந்த மருத்துவ அனுகுமுறையே வலியுறுத்துகிறது. சித்த மருத்துவம் என்பது நோய்யை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நோயாளி, சுற்றுச்சூழல், நோயாளியின் பால், வயது, பழக்கவழக்கங்கள், உணவு, உடலமைப்பு மற்றும் மனநிலை ஆகியவற்றை கொண்டு மருத்துவம் செய்கின்றது. இந்த மனித உடலானது முத்தாதுக்கள், ஏழு உடற்கட்டுகள் மற்றும் மும்மலங்களாலானது. இவற்றின் சரிவிகித நிலையால் உடல் நலமாகவும், நிலைபிறழ்ச்சியால் நோயும் உண்டாகிறது.சித்த மருந்துகள் பெரும்பாண்மையாக தாவரபொருட்களினாலும், மற்றும் கனிம, உலோகப் பொருட்களாலும் செய்யப்பட்டுள்ளது.

தொண்மையான சித்த மருத்துவமானது, சித்தர்களின் அனுபவ செறிவுகளாலும், கால மாறுபாடுகளாலும் வாழ்வியல் அறிவியலாக உருப்பெற்றுள்ளது.ஒருவரின் நலத்தை உடல், மனம், ஆன்மா மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் செயல் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் வகுக்கும் சித்த மருத்துவம், உடல் நலத்தை காக்கவும், மேன்மையடையவும், நோய் வரும் முன் காக்கவும் வழிவகுக்கிறது. மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் ஆராயும் நிறைவான அனுகுமுறையை உள்ளடக்கி, நோய் கணிப்பு மற்றும் மருத்துவ முறைகளைப் பெற்றுள்ளது.

நோய் வராமல் தடுத்து, வாழ்வின் தரத்தை மேன்மையுறச் செய்ய நாள் ஒழுக்கம், பருவ கால ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம் மற்றும் அறச்செயல் ஆகியனவற்றை வலியுறுத்துகிறது.நீண்ட ஆயுள் என்பது ஒருவருடைய உடலமைப்பைக் கொண்டு செயல்படும் வாழ்க்கைமுறையை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.

சித்த மருத்துவம் என்பது யோக மருத்துவம், மருந்தியல் மருத்துவம் மற்றும் மருந்தில்லா மருத்துவம் என்று விரியும். நோய்க்கான காரணி, நோயின் வீரியம் மற்றும் நோயாயளியின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக்க் கொண்டு மருத்துவ வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது. நோய்க் காரணிகளை நீக்குதல், உடல் சுத்தி முறைகள், மருந்து முறைகள் மற்றும் உடல் நலம் பேணும் பத்திய முறைகள் ஆகியன மருத்துவ வழிமுறையில் பின்பற்றப்படுவது சித்த மருத்துவத்தின் சிறப்பாகும்.பத்திய முறைகள் மற்றும் வாழ்வியல் ஒழுக்கங்கள் ஆகியன மருத்துவத்தோடு எப்போதும் வலியுறுத்தப்படுகிறது.

சித்த மருத்துவத்தின் பலம்

உடல் சுத்தி முறைகளான கழிச்சல், வாந்தி, நசியம், தொக்கணம் ஆகியனவும், மூலம், பவுத்திரம் நோய்களுக்கான அறுவை சிகிட்சையான கார நூல் மருத்துவமும் மற்றும் உடல் நலத்தை பேணி நீண்ட வாழ்நாளை பெற்று தரும் காயகற்பம் போன்றவை சித்த மருத்துவத்தின் சிறப்புகளாகப் போற்றப்படுகின்றன. இந்த மருத்துவ முறைகளால் நாட்பட்ட மற்றும் மருந்துகளுக்கு அடங்காத நோய்கள் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்த மருத்துவத்தில் காய கற்பம் எனபது சிறப்பு மருத்துவமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது வயதாகாமல் தடுப்பதும், அறிவுத் திறன், ஞாபக சக்தி, உடலின் நிறம், உணர்வு மற்றும் செயல்பாடுகளை பேணுவதாகும். உடலை பேணுவதன் பொருட்டு சித்த மருத்துவத்தில் எண்ணிலடங்காத தனி மற்றும் கூட்டு பொருட்களாலான காய கற்பங்கள் சொல்லப்பட்டுள்ளன.
உடல் சுத்தி முறைகளால், மருந்து நிலைத்து செயலாற்றுதல், முத்தாதுக்கள் சீரான நிலையில் நிற்றல்,நோயுண்டாக்கும் காரணிகள் வெளியேற்றப்படுதல், நோய் மீண்டும் வராமல் தடுத்தல் ஆகிய பயன்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. இம்முறை நாட்பட்ட நோய்கள், நரம்பியல் நோய்கள், மன நோய்கள், தசை மற்றும் என்பு நோய்களில் நல்ல பலனளித்திருக்கிறது. ஆகவே முதியோர் நல மேம்பாட்டில் இஃது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.


சித்த மருத்துவத்தின் சிறப்பு

ü தொன்மையானதும் இயற்கையோடு இயைந்த நிறைவான மருத்துவமாகையால் முதியோர் நலத்தில் மிகுந்த அக்கறை.
ü வாழ்வியல் நெறிமுறை மாற்றங்களை உள்ளடக்கிய மருத்துவம்.
ü எல்லா தரப்பு மக்களும் வாங்குமளவில் மலிவானது.
ü முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.

சில நோய்களுக்கான சிறப்பு காய கற்பங்கள்

1. உடல் தேற்றும் பொது காய கற்பம்: சீந்தில், நெல்லி, அமுக்குரா, பசும் பால்.
2. மூட்டு நோய்கள்: பூண்டு, குக்குலு, அமுக்குரா.
3. சுவாச காச நோய்: வாகை, அகத்தி, மஞ்சள், கடுக்காய்.
4. இதய வலிமை: தொழுகண்ணி, மருதம், குக்குலு.
5. நரம்பு நோய்கள்: பூண்டு, குக்குலு, குறுந்தொட்டி, அமுக்குரா.
6. நீரிழிவு: சிலாசத்து, நெல்லி, மஞ்சள், வெந்தயம்.
7. கொழுப்பினால்உண்டாகும்நோய்கள்: குக்குலு, கடுக்காய், வசம்பு
8. மூளை நோய்கள்மற்றும்ஞாபக மறதி: நீர்ப்பிரமி, வல்லாரை, வாலுழுவை, பூனைக்காலி.
9. கண் நோய்கள்: வாலுழுவை, திரிபலை, தண்ணீர்விட்டான் கிழங்கு, அதிமதுரம், நெல்லி.


உடல் தேற்றும் பொது காயகற்பங்கள்:

1. நெல்லிக்காய் இளகம்
2. அமுக்குரா இளகம்
3. திரிபலை நெய்
4. திரிபலை சூரணம்
5. அமுக்குரா சூரணம்
6. நெல்லிக்காய் சூரணம்.

புதன், 15 டிசம்பர், 2010

Podcast: Robotic Assisted Prostatectomy

Living Donor Kidney Transplant Surgery

Kidney Functions in the Body

Diabetic Nephropathy

Yogananth Andiappan's Yoga Demonstration at Yogamania Singapore

How to Lose Belly Fat Through Yoga

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

acupuncture: Acupuncture DVD - How to Locate Acupuncture Points (Bladder Meridian)

acupuncture: Acupuncture DVD - How to Locate Acupuncture Points (Bladder Meridian)

Acupuncture Therapy : Acupuncture Bleeding & Cupping Demo

Treating Common Ailments With Acupuncture : Example of Acupuncture Treat...

Acupuncture DVD - How to Locate Acupuncture Points (Bladder Meridian)

Massage Therapy Demonstration Full Body Lymph Drainage

Ayurveda Panchakarma Navarakkizhi Oil Massage Kerala

acupuncture: மனிதனின் உடலில் உள்ள அழுக்கினை கழுவிவிடலம் அனால் ம...

acupuncture

acupuncture
மனிதனின் உடலில் உள்ள அழுக்கினை கழுவிவிடலம் அனால் மனதில் உள்ள அழுகினையும் .,மனித உறுப்புகளில் உள்ள அழுக்கினை இதுபோல நீவி விடுதலின் மூலம் பல வியாதிகளை குணபடுத்தலாம்.

bodywork techniques for bladder and kidneys

massage and acupressure for better breathing