திருக்குறள்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

சித்த மருத்துவம் தென்னிந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. ‘சித்தம்’ என்ற சொல்லானது ‘முக்தி பெறுவது’ ‘முழுமை’, ‘அடையப்படவேண்டிய பொருள்’ ‘சித்தி’ என்ற முலச் சொல்லில்லிருந்து பிறந்த்தாகும்.

சித்த மருத்துவத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும், முழுமையான நிறைந்த மருத்துவ அனுகுமுறையே வலியுறுத்துகிறது. சித்த மருத்துவம் என்பது நோய்யை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நோயாளி, சுற்றுச்சூழல், நோயாளியின் பால், வயது, பழக்கவழக்கங்கள், உணவு, உடலமைப்பு மற்றும் மனநிலை ஆகியவற்றை கொண்டு மருத்துவம் செய்கின்றது. இந்த மனித உடலானது முத்தாதுக்கள், ஏழு உடற்கட்டுகள் மற்றும் மும்மலங்களாலானது. இவற்றின் சரிவிகித நிலையால் உடல் நலமாகவும், நிலைபிறழ்ச்சியால் நோயும் உண்டாகிறது.சித்த மருந்துகள் பெரும்பாண்மையாக தாவரபொருட்களினாலும், மற்றும் கனிம, உலோகப் பொருட்களாலும் செய்யப்பட்டுள்ளது.

தொண்மையான சித்த மருத்துவமானது, சித்தர்களின் அனுபவ செறிவுகளாலும், கால மாறுபாடுகளாலும் வாழ்வியல் அறிவியலாக உருப்பெற்றுள்ளது.ஒருவரின் நலத்தை உடல், மனம், ஆன்மா மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் செயல் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் வகுக்கும் சித்த மருத்துவம், உடல் நலத்தை காக்கவும், மேன்மையடையவும், நோய் வரும் முன் காக்கவும் வழிவகுக்கிறது. மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் ஆராயும் நிறைவான அனுகுமுறையை உள்ளடக்கி, நோய் கணிப்பு மற்றும் மருத்துவ முறைகளைப் பெற்றுள்ளது.

நோய் வராமல் தடுத்து, வாழ்வின் தரத்தை மேன்மையுறச் செய்ய நாள் ஒழுக்கம், பருவ கால ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம் மற்றும் அறச்செயல் ஆகியனவற்றை வலியுறுத்துகிறது.நீண்ட ஆயுள் என்பது ஒருவருடைய உடலமைப்பைக் கொண்டு செயல்படும் வாழ்க்கைமுறையை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.

சித்த மருத்துவம் என்பது யோக மருத்துவம், மருந்தியல் மருத்துவம் மற்றும் மருந்தில்லா மருத்துவம் என்று விரியும். நோய்க்கான காரணி, நோயின் வீரியம் மற்றும் நோயாயளியின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக்க் கொண்டு மருத்துவ வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது. நோய்க் காரணிகளை நீக்குதல், உடல் சுத்தி முறைகள், மருந்து முறைகள் மற்றும் உடல் நலம் பேணும் பத்திய முறைகள் ஆகியன மருத்துவ வழிமுறையில் பின்பற்றப்படுவது சித்த மருத்துவத்தின் சிறப்பாகும்.பத்திய முறைகள் மற்றும் வாழ்வியல் ஒழுக்கங்கள் ஆகியன மருத்துவத்தோடு எப்போதும் வலியுறுத்தப்படுகிறது.

சித்த மருத்துவத்தின் பலம்

உடல் சுத்தி முறைகளான கழிச்சல், வாந்தி, நசியம், தொக்கணம் ஆகியனவும், மூலம், பவுத்திரம் நோய்களுக்கான அறுவை சிகிட்சையான கார நூல் மருத்துவமும் மற்றும் உடல் நலத்தை பேணி நீண்ட வாழ்நாளை பெற்று தரும் காயகற்பம் போன்றவை சித்த மருத்துவத்தின் சிறப்புகளாகப் போற்றப்படுகின்றன. இந்த மருத்துவ முறைகளால் நாட்பட்ட மற்றும் மருந்துகளுக்கு அடங்காத நோய்கள் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்த மருத்துவத்தில் காய கற்பம் எனபது சிறப்பு மருத்துவமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது வயதாகாமல் தடுப்பதும், அறிவுத் திறன், ஞாபக சக்தி, உடலின் நிறம், உணர்வு மற்றும் செயல்பாடுகளை பேணுவதாகும். உடலை பேணுவதன் பொருட்டு சித்த மருத்துவத்தில் எண்ணிலடங்காத தனி மற்றும் கூட்டு பொருட்களாலான காய கற்பங்கள் சொல்லப்பட்டுள்ளன.
உடல் சுத்தி முறைகளால், மருந்து நிலைத்து செயலாற்றுதல், முத்தாதுக்கள் சீரான நிலையில் நிற்றல்,நோயுண்டாக்கும் காரணிகள் வெளியேற்றப்படுதல், நோய் மீண்டும் வராமல் தடுத்தல் ஆகிய பயன்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. இம்முறை நாட்பட்ட நோய்கள், நரம்பியல் நோய்கள், மன நோய்கள், தசை மற்றும் என்பு நோய்களில் நல்ல பலனளித்திருக்கிறது. ஆகவே முதியோர் நல மேம்பாட்டில் இஃது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.


சித்த மருத்துவத்தின் சிறப்பு

ü தொன்மையானதும் இயற்கையோடு இயைந்த நிறைவான மருத்துவமாகையால் முதியோர் நலத்தில் மிகுந்த அக்கறை.
ü வாழ்வியல் நெறிமுறை மாற்றங்களை உள்ளடக்கிய மருத்துவம்.
ü எல்லா தரப்பு மக்களும் வாங்குமளவில் மலிவானது.
ü முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.

சில நோய்களுக்கான சிறப்பு காய கற்பங்கள்

1. உடல் தேற்றும் பொது காய கற்பம்: சீந்தில், நெல்லி, அமுக்குரா, பசும் பால்.
2. மூட்டு நோய்கள்: பூண்டு, குக்குலு, அமுக்குரா.
3. சுவாச காச நோய்: வாகை, அகத்தி, மஞ்சள், கடுக்காய்.
4. இதய வலிமை: தொழுகண்ணி, மருதம், குக்குலு.
5. நரம்பு நோய்கள்: பூண்டு, குக்குலு, குறுந்தொட்டி, அமுக்குரா.
6. நீரிழிவு: சிலாசத்து, நெல்லி, மஞ்சள், வெந்தயம்.
7. கொழுப்பினால்உண்டாகும்நோய்கள்: குக்குலு, கடுக்காய், வசம்பு
8. மூளை நோய்கள்மற்றும்ஞாபக மறதி: நீர்ப்பிரமி, வல்லாரை, வாலுழுவை, பூனைக்காலி.
9. கண் நோய்கள்: வாலுழுவை, திரிபலை, தண்ணீர்விட்டான் கிழங்கு, அதிமதுரம், நெல்லி.


உடல் தேற்றும் பொது காயகற்பங்கள்:

1. நெல்லிக்காய் இளகம்
2. அமுக்குரா இளகம்
3. திரிபலை நெய்
4. திரிபலை சூரணம்
5. அமுக்குரா சூரணம்
6. நெல்லிக்காய் சூரணம்.

கருத்துகள் இல்லை: