திருக்குறள்

வியாழன், 24 மே, 2012

Digestive Disorders Ayurvedic Treatment Tamil

Digestive Disorders Ayurvedic Treatmentவாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல, உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து. நடுத்தர வயதினர், முதியவர்கள், வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்த தொடங்கி மூட்டுவலி, கால் வலி எல்லாவற்றுக்கும் வாயுவை பழிசொல்லாமலிருப்பதில்லை
அபான வாயு உடலிலிருந்து பிரிவதை யாருமே விரும்புவதில்லை. பலர் முன்பு இது ஏற்பட்டால், தர்ம சங்கடமாக நாம் நினைக்கிறோம். புகழ் பெற்ற அரேபிய இரவுகள் கதைகளில், ஒரு விருந்தின் முடிவில், பலர் முன்பு வாயு வெளியேறியதால், அவமானமடைந்த ஒருவர் ஊரை விட்டே ஓடி விடுவதாக ஒரு கதை உண்டு! சராசரியாக, ஒரு இந்தியன் ஒரு நாளில் 2-4 தடவை அபான வாயுவை வெளியேற்றுகிறான். இந்த வாயு நாற்றமில்லாமலே இருக்கலாம். இதை அடக்குவது கூடாது என்கிறது ஆயுர்வேதம்.
உடல் முழுவதும் காற்றடைத்த பையல்ல வாயின் வழியே உள் நுழையும் காற்று இரப்பையால், ஏப்பமாக திருப்பி அனுப்பப்படும். வயிற்றிலிருந்து வாய்வும், மலமும் வெளியேறுவது நல்லது. இவை தேங்கிவிட்டால்தான் பிரச்சனை. ஜீரண மண்டலத்தில் அதிக வாயு உணடானால், அதை வெளியேற்ற பல வழிகள் மேற்கொள்ளப்படுகிறது. குதம் வழியாகவும், வாய்வழியே ஏப்பமாகவும் வெளியேற்றப்படும். மூன்றாவது முறையாக, ஜீரண அவயங்களின் சுவர்கள் வழியே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, நுரையீரல் வழியே வெளியேற்றப்படுகிறது. ஜீரண மண்டலத்திலுள்ள பாக்டீரியாக்களும் சுலபமாக வெளியேற்றுவதற்காக, வாயுவை சிதைத்து மாற்றுகின்றன

கருத்துகள் இல்லை: