மார்பக புற்றுநோய் என் பார்வையில்:
குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம்.
பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மார்பகத்தில் சதைக் கோளங்கள் போன்ற வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் 80 சதவீதக் கட்டிகள் கேன்சர் கட்டிகள் இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் அறிகுறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினாலோ, கட்டிகளில் வலி இருப்பது போல உணர்ந்தாலோ, வலி இல்லாவிட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அடுத்தகட்டமாக மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள மெமோகிராபி எனப்படும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த சோதனை மூலம் புற்றுநோயை உறுதி செய்ய முடியும். மேலும் நுண்ணிய ஊசியின் வழியாக கட்டியின் திசுக்களை சேகரித்து ஆய்வுக்கூடத்தில் சோதித்து அதனை உறுதி செய்து கொள்ளலாம். கேன்சர் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகளவில் ஹார்மோன் மாத்திரை உட்கொள்பவர்கள், மாதவிலக்கு காலத்தில் மார்பில் வரும் மாற்றத்துக்கு சரியாக சிகிச்சை எடுக்காதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குறைந்த வயதில் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியவர்கள், எப்போதும் மன வருத்தத்தில் இருப்பவர்கள், அதிக உதிரப்போக்கு, அதிக வெள்ளைப் போக்கு போன்ற பிரச்னையை முறையாக கவனிக்காமல் விட்டவர்கள், தைராய்டு பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காதவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பரம்பரை காரணங்களாலும் வரலாம்.
பாதுகாப்பு முறை:
பெண்கள் எப்போதும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். தாய்மைக் காலத்தில் பெண்கள் தாய்ப்பால் தருவது மிக முக்கியமானது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை. இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. நாள்பட்ட கேன்சருக்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ஆரம்பத்தில் கேன்சர் கட்டிகள் கண்டறியப்பட்டால் ஹோமியோபதியில் கட்டியை கரைப்பதற்கான மருந்துகள் உள்ளன. மேலும் கேன்சர் பாதிப்பை அடுத்த உறுப்புகளுக்கு பரவாமல் தடுக்க முடியும். கெமிக்கல் கலப்புள்ள உணவு வகைகளை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. முளை கட்டிய பயறு, நெல்லிக்காய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது சிறந்தது. சுகாதாரமான குடிநீரும் அவசியம். மேலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியும்.
உணவு:
சேமியா டால் பாத்: சேமியா ஒரு கப் நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு 50 கிராம் எடுத்து அதில் சீரகத்தூள், பூண்டு இரண்டு பல், வெந்தயம் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் தாளித்து பின்னர் வெங்காயம்4, தக்காளி1, பச்சை மிளகாய்2 சேர்த்து வதக்கவும். இத்துடன் துவரம்பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் சேமியா சேர்த்து வெந்தபின் இறக்கவும். இதில் கார்போஹைட்ரேட், மினரல்கள் கிடைக்கும். ரவா அடை: 2 முட்டையை உடைத்து ஊற்றி, அதில் அரைக்கிலோ வெள்ளை ரவை சேர்த்துக் கலக்கவும். 20 சின்ன வெங்காயம் மற்றும் 3 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்க்கவும். கெட்டியான ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு போட்டு அடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை உடனடியாக தோசைக்கல்லில் அடையாக சுட்டு எடுக்கலாம். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. கத்தரி வடை: 100 கிராம் கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். கடலைப் பருப்பு மற்றும் முளை கட்டிய 50 கிராம் பச்சைப் பயறு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பொடியாக நறுக்கிய 150 கிராம் கத்தரிக்காய் மற்றும் 6 பச்சைமிளகாயைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் 50 கிராம் கெட்டித் தயிர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
உணவு முறை:
மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்? பொதுவாக 50 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருகிறது. எச்.ஈ.ஆர்.2 என்ற ஜீனும் இதற்கு ஒரு காரணமாகிறது. தாய்மை அடையாத பெண்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவத்தில் ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். இதே போல் பால் மற்றும் பால் பொருட்கள், நெய், வெண்ணெய், டீ, காபி, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, பிஸ்தா தவிர்க்கவும். பழ வகையில் பப்பாளி தவிர்க்கவும். காய்களில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். முட்டைக்கோஸ், கேரட், பூசணி, சர்க்கரைப் பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். ஆப்பிள், செர்ரி, மாதுளை, திராட்சை மற்றும் தர்பூசணிப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகளில் சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். அசைவ வகையில் கொழுப்பு இல்லாத எலும்பு உள்ள சிக்கன் மற்றும் முட்டை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
பாட்டி வைத்தியம்
பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளு க்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். மகிழம் பூவை பறித்து வைத்து கட்டிக் கொண்டால் மார்புகள் எடுப்பான தோற்றம் அளிக்கும். மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத் திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும். இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்னைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம். அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சை யாக சாப்பிடுவது நல்லது. கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக