திருக்குறள்

புதன், 26 பிப்ரவரி, 2014

நீரழிவு பற்றிய உண்மைகள்


நீரழிவு பற்றிய உண்மைகள் 

இனிப்பைத் தவிர்த்தாலும் நீரிழிவு வரும்!!!

உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். குறிப்பாக சொல்ல முடியாத அளவில், உலகிலேயே அதிகமானோர் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.

மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!!

உண்மை – 1 : “சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது” என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.

உண்மை – 2: “இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்” என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.

உண்மை – 3 “நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது” என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

உண்மை – 4 “நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு அதிகரிக்கும்” என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

உண்மை – 5 “நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது” என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை புற்றுநோயை உண்டாக்கும்.

உண்மை – 6 “என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு வராது “என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.

உண்மை – 7 “குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது” என்று இருப்பது. உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை – 8 “குழந்தைகளுக்கு டைப்-2 நீரிழிவு வராது” என்பது. பொதுவாக அனைவரும் குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.

உண்மை – 9 “கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது” என்று நினைப்பது. உண்மை தான், கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்.

உண்மை – 10: “நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

கருத்துகள் இல்லை: