திருக்குறள்

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான்:-

மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான்:-
* மூட்டு வாதமா? முடக்கற்றான் கீரையை சாப்பிடுங்கள். இது பலருக்கு தெரிந்த மூட்டு வாத அறிவுரை. பெயருக்கேற்ற செயல்பாடு உடையதுமுடக்கற்றான் (முடக்கு + அறுத்தான்) பழங்காலத்திலிருந்து மூட்டுவலி, மூட்டு பாதிப்புகளுக்கு கைமருந்தாக பயன்பட்டு வருகிறது.
* சித்த வைத்தியத்திலும் உபயோகிக்கப்படுகிறது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும்.
* செடியின் வேர், இலை செடி முழுவதும் மருத்துவ பயன்களுடையவை.மூட்டுவாதம், மூட்டுவலி (ஆர்த்தரைடீஸ், ருமாடிஸம்) இவற்றுக்கு முடக்கற்றான் மூலிகையின் முக்கிய பயன், நோயால் முடங்கிப்போன முட்டிகளை மீண்டும் இயங்க வைக்கும்.
* கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல் போதல், இவற்றுக்கெல்லாம் முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும்.
* இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம் போல் தயாரித்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும்.
* இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் தீரும்.
* இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர் இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.
* இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு, முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும்.
* முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து, வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.

கருத்துகள் இல்லை: