திருக்குறள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013


எங்கும் நிறைந்திருக்கும் ஏகாந்தப் பரம்பொருளாம் சிவபெருமானை வேண்டிவணங்கி, நோயில்லா நூறாண்டு வாழ்க்கை பெற விழைவோம்; வாருங்கள். பரம்பொருள்ஒன்றென்றாலும், பல்கிப் பெருகி, பல பரி ணாமங்களைக் கொண்டு, காற்றாய்,மழையாய், நீராய், நெருப்பாய், பிரபஞ்சமாய், பெருமலை யாய், நீயாய், நானாய்,எங்கும் நிறைவு கொண் டிருப்பவன் அந்த சிவனேயன்றி வேறில்லை.

நித்திய நிகழ்வுகள் அத்தனைக்கும் சத்திய மாய் அவனே காரணம். நமது சந்தோஷங்களுக்கும் நாம் சந்திக்கும் பிற தோஷங்களுக்கும் அவனே காரணம். ஆடுவதும்ஓடுவதும் அசைவதும் நிற்பதுவும் எல்லாமும் அவனே என்பது நிதர்சனமான உண்மை.

பிணி, மூப்பு, மரணம் என்பது சிவனால் வகுக்கப்பட்ட நியதி. வாழ்க்கையில்தனிப்பட்ட தருணங்களில் உண்டாகும் மகிழ்ச்சியால் இறைவனை மறந்து விடுகிறோம்.ஆனால் ஈசன் மறக் காமல் மகிழ்ச்சிக்குப்பின் துன்பம் என்பதை பிணி வழிசெய்தியாய் நம்மிடம் சேர்த்து விடுகிறார்.

சாகாக்கலை கண்ட சன்மார்க்க யோகி- முக்திக்கு வித்திட்ட எம்பெருமான்வள்ளலார் கூட, "உன்னை அண்டிப் பிழைப்பை நடத்தும் அன்பர்களை ஏன்சோதிக்கிறாய்' என்று பின்வருமாறு கூறுகிறார்.

"எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஏகாந்த சிவனே!

சதா உன் மெய்யடியார்களை ஏன் சோதித் துக் கொண்டிருக்கிறாய்? அடியார்களின்உள்ளத்திலே கஷ்டங்களை உண்டாக்கி ஏன் துன்பத்தில் தள்ளி விடுகிறாய்?

வாளால் மகவரிந்து உணவு படைக்கச் சொன்னவனும் நீதானே ஐயா! நீ உயிர்களின்மேல் கொண்டிருக்கும் அன்பும் கருணையும் அடியேன் அறிவேன் ஐயா. கொடியவிஷத்தை உடைய பாம்பிற்கும் பரிவைக் காட்டி, கருணை யுடன் அணிந்திருக்கும்உம் மனதைப் பற்றி இந்த உலகிற்கே தெரியுமே ஐயா! கொடிய ஆலகாலவிஷத்தையெல்லாம் உண்டு, கண்டம் கறுத்து அகிலம் காத்த ஐயா, உம்மை நன்றாகயாம் அறிவோம். இப்படி நற்குணம் கொண்ட நாதனே! என் விஷயத்தில் மட்டும் ஏன்பாராமுகமாய் இருக்கிறாய்...?

"ஆனந்தக் கூத்தாடும் நீலகண்டனே! என் நெஞ்சில் கால்பதித்து எப்பொழுதுஎன்னுள் இறங்கி என்னை ஆட்கொள்வாய்?' என்று வள்ளலார் இறைவனிடம்வேண்டுகிறார்.

நாமும் சிவபெருமானைச் சரணடைந்து, மூப்புக்குக் காரணமான பிணி நீக்கிபெருவாழ்வு பெற முனைவோம். ஸ்ரீசைலத்தில் அருள்பாலித் துக் கொண்டிருக்கும்சிவனை வணங்கி, அத் தலத்தில் ஸ்தலவிருட்சமாய் எழுந்தருளியிருக்கும்கண்டங்கத்திரியை முழுமையாய் சரணடைந்து, முக்திக்கு வழியில்லையென்றாலும்நோய் நீங்கி சக்தி பெற முனைவோம்; வாருங்கள்.

ஆஸ்துமா குணமாக...

ஆஸ்துமாவை முழுமையாகக் குணப் படுத்தும் அற்புதத்திறன் கண்டங்கத்தரிக்குஉண்டு. சமீபத்தில் எனது எழுத்துக்களை இடைவிடாது வாசிக்கும் வாசகர் ஒருவர்ஒரு கடிதம் எழுதியிருந்தார். தான் ஆஸ்துமா எனப் படும் இரைப்புநோயில்மிகவும் துன்புறுவதாக வும்; தனக்கு ஏதேனும் சித்த மருந்துகளைப்பரிந்துரைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் இந்தநோயைப் பற்றி ஒரு அற்புதமான பழமொழியொன்றையும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

"நித்திய கண்டம் பூரண ஆயுள்' -இதுவே அந்தப் பழமொழியாகும். அதாவது தான்படும் தினசரி வேதனையானது மரணத்திற்கு ஒப்பானது. ஆனால் பூரண ஆயுளுடன்இருப்பதாகவும் அர்த்தமாகிறது.

அந்த வாசகருக்காகவே மானுடனுக்கு உண்டாகும் கண்டத்தை கத்திரிபோல் நீக்கும்கண்டங்கத்திரி பற்றிய மருத்துவ உண்மைகளைக் குறிப்புகளாக வரைந்துள்ளேன்.

கண்டங்கத்திரி இலை, பூ, காய், வேர் ஆகிய வற்றை வகைக்கு 20 கிராம்எடுத்துக் கொள்ள வும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்த ரத்தை,அதிமதுரம், சீரகம், சோம்பு, கடுஞ்சீரகம், ஜாதிக்காய், சடாமாஞ்சில்,சதகுப்பை, ஓமம், மாசிக்காய், கற்கடகசிருங்கி, ஏலக்காய், கடுக்காய்,இந்துப்பு, பச்சைக் கற்பூரம் போன்றவற்றை வகைக்கு பத்து கிராம் கலந்து,அனைத்தையும் தூள் செய்து பத்திரப்படுத்தவும்.

இதில் ஐந்து கிராம் அளவுபொடியை எடுத்து இரண்டு டம்ளர் (400 மிலி) நீருடன்சேர்த்து கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து சிறிது பனங்கற்கண்டுசேர்த்துச் சுவை யாக, காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர,சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தலைவலி, தலைபாரம், தும்மல்,மூக்கடைப்பு, பசியின்மை போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கி, நித்தியசௌக்கியம் மற்றும் பூரண ஆயுளுடன் வாழலாம்.

பல்வலி குணமாக...

பல்வலி பல்வேறு காரணங்களால் வரலாம். தலைசார்ந்த நோய்கள், சைனஸ்,நீர்கோர்வை நோய்களின் வெளிப்பாடாய் பல்வலி வரலாம். நுரையீரல் மற்றும்இதயநோய்களின் அறிகுறி யாய்கூட பல்வலி வருவதுண்டு. பற்களின் உறுதியானநிலைக்கு சுண்ணாம்பு எனப்படும் கால்சியமே ஆதாரசக்தியாகும். அத்தகையசுண்ணாம்பில் ஏற்படும் தொற்றுகளாலேயே பல்வலி மற்றும் பற்களைச் சார்ந்தநோய்கள் உண்டாகின்றன. தொற்றுகளைக் களைவதில் எம்பெருமான் சிவனின்அருட்கடாட்சம் பெற்ற கண்டங்கத்திரியே முன்னோடியாகும்.

100 கிராம் கண்டங்கத்திரி விதையைத் தூள் செய்து 100 கிராம் சாம்பிராணித்தூளுடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் தேவை யான அளவு பொடியைநெருப்பிலிட்டு, அதில் வரும் புகையை பற்களில் படும்படி நுகர, பல்வலி உடனேகுணமாகும்.

பற்கள் சார்ந்த நோய்களுக்கு அதிசயமாய் குணமளிக்கும் பற்பொடி ஒன்றை நீங்களே வீட்டில் தயார் செய்துகொள்ளுங்கள். இதோ அதற்கான செய்முறை:

கண்டங்கத்திரி விதை, தாளிசபத்திரி, கொய்யா இலை, ஆலம்பட்டை, அரசம்பட்டை,வாய்விளங்கம், கொட்டைப்பாக்கு ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கித் தூள்செய்து கொள்ளலாம். இத்துடன் காவிக்கல், பச்சைக் கற்பூரம், இந்துப்புபோன்றவற்றை வகைக்கு பத்து கிராம் அளவில் எடுத்து ஒன்றாகத் தூள் செய்துநன்கு கலந்து பத்திரப்படுத்தவும். இதைக் கொண்டு பல் துலக்கிவர பல்வலி,பல்கூச்சம், ஈறு அரிப்பு, ஈறுகளில் உண்டாகும் புண் போன்றவை குணமாகும்.

தலைவலி குணமாக...

கண்டங்கத்திரி இலையை அரைத்து 30 மி.லி. அளவில் சாறெடுத்து, அதில் சிறிதுபச்சைக் கற்பூரத்தைக் கலந்து நெற்றியில் தேய்த்து, சிறிது தலை உச்சியிலும்இதமாய்த் தேய்த்துவிட தலைவலி உடனே தீரும். அடிக்கடி தலைவலியால்அவதிப்படுபவர்கள் இங்கே சொல்லப்படும் தைலத்தைக் காய்ச்சி தலைக்குக்குளித்துவர, தலைவலி முற்றிலுமாய் குணமாகும்.

கண்டங்கத்திரி வேர், சுக்கு, சித்தரத்தை, சோம்பு ஆகியவற்றை வகைக்கு 20கிராம் எடுத்து பால் விட்டரைத்து, 300 மி.லி. நல்லெண்ணெ யிலிட்டு பதமுறக்காய்ச்சி இறக்கிவிடவும். இந்த எண்ணெய்யைத் தேய்த்துத் தலைமுழுகி வர,தலைவலி, தலைபாரம், தும்மல், சைனஸ் போன்ற குறைபாடுகள் தீரும்.

மூட்டுவலி குணமாக...

கண்டங்கத்திரி இலைச்சாறு, வாத நாராயணா இலைச்சாறு, முடக்கத்தான் சாறுஆகியவற்றை வகைக்கு 100 மி.லி. எடுத்து, அத்துடன் ஒரு லிட்டர் நல்லெண்ணெய்சேர்த்து தைலபதமாய்க் காய்ச்சி இறக்கி, பின்னர் 50 கிராம் பச்சைக்கற்பூரம்தூள் செய்து சேர்க்கவும். இந்த தைலத்தில் தேவையான அளவு எடுத்து சூடுசெய்து கால்மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்துவர,சகலவலிகளும் உடனே குணமாகும்.

இருமல் விலக...

கண்டங்கத்திரி வேர் பத்து கிராம், திப்பிலி 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர்தண்ணீர் சேர்த் துக் கசாயமிட்டு, 60 மி.லி. அளவில் காலையும் மாலையும்சாப்பிட்டு வர, எப்பேர்ப்பட்ட இருமலும் தணியும்.

சகல காய்ச்சலும் விலக...

கண்டங்கத்திரி வேர், கண்டு பாரங்கி, கோரைக்கிழங்கு, சுக்கு, சிறுவழுதலைவேர் முதலியவற்றை வகைக்கு பத்து கிராம் அளவில் எடுத்து, ஒரு லிட்டர்தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து நாலில் ஒரு பங்காய்ச் சுண்டச்செய்து, வேளைக்கு 60 மி.லி. அளவு சாப்பிட்டு வர சகல காய்ச்சல்களும் தீரும்.

கண் பார்வை தெளிவு பெற...

கண்டங்கத்திரிப்பூக்களை 100 கிராம் அளவு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.அத்துடன் சீரகம், திப்பிலி, நெல்லிமுள்ளி ஆகியவற்றை சேர்த்து தூள் செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு பொடியைப் பாலில் கலந்து 48 நாட்கள்(ஒரு மண்டலம்) தொடர்ந்து சாப்பிட்டு வர கண்பார்வை கூர்மையாகும்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

மோர்/ நீர்மோர் (Buttermilk):

மோர்/ நீர்மோர் (Buttermilk):

தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.

ஆதிகாலத்தில் நம்மவர் தயிர் சாப்பிடுவது குறைவு. ஆனால் மோர் நிறையக் குடிப்பர். சித்தர் தேரையர் கூறுகிறார் தண்ணீரைவிட மனிதர் மோர் கூடுதலாகக் குடிக்க வேண்டுமென்று. மோர் குடித்தால் உடற்சூடு தணிக்கப்பட்டு மேலும் அதிலள்ள உடலக்குத் தேவையான நுண்ணுயிர்கள் (friendly bacteria) எமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. So, MOOR(மோர்) is a FRIENDLY BACTERIA drink. ‪#‎Drink‬ MOOR, Live HEALTHY.

எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும். கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..

தேவையான பொருட்கள்:

தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:

வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.

கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.


"அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட

"அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட

உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ்டிரைடிஸ்” என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.

அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.

மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும்.

தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.

இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?

தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.

புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.

இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.

மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.

அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.

ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

வியாழன், 4 ஜூலை, 2013

கருச்சிதைவை தடுக்க சில வழி முறைகள்


கருச்சிதைவை தடுக்க சில வழி முறைகள்

கருச்சிதைவை தடுக்க சில வழி முறைகள்

கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். 

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சில குறிப்பிட்ட நோய்களுக்கு (புற்றுநோய், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவு ஏற்பட முக்கிய காரணங்களாகும்.. 

குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம். முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும் கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம்.

கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று தெரிய

கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று தெரிய வேண்டுமா?

கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று தெரிய வேண்டுமா?
கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான். உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம். 

கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு ரோஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும். 

கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும். 

ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர். கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும். 
ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

கர்ப்பிணிகளுக்கு அட்வைஸ்

· கர்ப்பிணிகள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை பிறக்கும். சுகப் பிரசவம் ஆகும். 

· கர்ப்பிணிகள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும். 

· கர்ப்பிணிகள் மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது. 

· அதிக உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உண்ணக் கூடாது. 

· மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய வாகனங்களில் செல்லக் கூடாது. 

· மேல்நோக்கிப் படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும். 

· கர்ப்பிணிகள் சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் குழந்தைக்கு காக்கா வலிப்பு ஏற்படும். 

· சதா வருத்தத்துடன் உள்ளவர்களுக்கு பயப்படும் சுபாவம் உள்ள குழந்தை பிறக்கும். 

· கர்ப்ப காலத்தில் பிறருக்கு கெடுதியை நினைத்தால் பிறக்கும் குழந்தை பிறரை இம்சிப்பவனாகவும், பொறாமை குணம் உள்ளதாகவும் இருக்கும். 

· கர்ப்ப காலத்தில் சதா தூங்கிக்கொண்டே இருந்தால் பிறக்கும் குழந்தை சோம்பல் புத்திகுறைவு, அக்கினி பலம் குறைவு போன்ற குறைபாடுகளுடன் பிறக்கும். 

· மதுபானம் கர்ப்பகாலத்தில் குடித்தால், பிறக்கும் குழந்தை சஞ்சல புத்தி உடையவனாக பிறக்கும். 

· இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை சர்க்கரை வியாதி, ஊமைத்தன்மை, அதிக பருமன் ஆகியவை உண்டாகும். 
· அதிக புளிப்பு சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு இரத்த பித்தம், தோல், கண் வியாதிகள் ஏற்படும். கசப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை உடம்பு உலர்ந்தும் பலம் குன்றியதுமாகவும் இருக்கும். துவர்ப்பு அதிகம் சாப்பிட்டால் கருத்த மேனியும், பொருமல் வியாதியும் உள்ள குழந்தை பிறக்கும்.