திருக்குறள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013


எங்கும் நிறைந்திருக்கும் ஏகாந்தப் பரம்பொருளாம் சிவபெருமானை வேண்டிவணங்கி, நோயில்லா நூறாண்டு வாழ்க்கை பெற விழைவோம்; வாருங்கள். பரம்பொருள்ஒன்றென்றாலும், பல்கிப் பெருகி, பல பரி ணாமங்களைக் கொண்டு, காற்றாய்,மழையாய், நீராய், நெருப்பாய், பிரபஞ்சமாய், பெருமலை யாய், நீயாய், நானாய்,எங்கும் நிறைவு கொண் டிருப்பவன் அந்த சிவனேயன்றி வேறில்லை.

நித்திய நிகழ்வுகள் அத்தனைக்கும் சத்திய மாய் அவனே காரணம். நமது சந்தோஷங்களுக்கும் நாம் சந்திக்கும் பிற தோஷங்களுக்கும் அவனே காரணம். ஆடுவதும்ஓடுவதும் அசைவதும் நிற்பதுவும் எல்லாமும் அவனே என்பது நிதர்சனமான உண்மை.

பிணி, மூப்பு, மரணம் என்பது சிவனால் வகுக்கப்பட்ட நியதி. வாழ்க்கையில்தனிப்பட்ட தருணங்களில் உண்டாகும் மகிழ்ச்சியால் இறைவனை மறந்து விடுகிறோம்.ஆனால் ஈசன் மறக் காமல் மகிழ்ச்சிக்குப்பின் துன்பம் என்பதை பிணி வழிசெய்தியாய் நம்மிடம் சேர்த்து விடுகிறார்.

சாகாக்கலை கண்ட சன்மார்க்க யோகி- முக்திக்கு வித்திட்ட எம்பெருமான்வள்ளலார் கூட, "உன்னை அண்டிப் பிழைப்பை நடத்தும் அன்பர்களை ஏன்சோதிக்கிறாய்' என்று பின்வருமாறு கூறுகிறார்.

"எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஏகாந்த சிவனே!

சதா உன் மெய்யடியார்களை ஏன் சோதித் துக் கொண்டிருக்கிறாய்? அடியார்களின்உள்ளத்திலே கஷ்டங்களை உண்டாக்கி ஏன் துன்பத்தில் தள்ளி விடுகிறாய்?

வாளால் மகவரிந்து உணவு படைக்கச் சொன்னவனும் நீதானே ஐயா! நீ உயிர்களின்மேல் கொண்டிருக்கும் அன்பும் கருணையும் அடியேன் அறிவேன் ஐயா. கொடியவிஷத்தை உடைய பாம்பிற்கும் பரிவைக் காட்டி, கருணை யுடன் அணிந்திருக்கும்உம் மனதைப் பற்றி இந்த உலகிற்கே தெரியுமே ஐயா! கொடிய ஆலகாலவிஷத்தையெல்லாம் உண்டு, கண்டம் கறுத்து அகிலம் காத்த ஐயா, உம்மை நன்றாகயாம் அறிவோம். இப்படி நற்குணம் கொண்ட நாதனே! என் விஷயத்தில் மட்டும் ஏன்பாராமுகமாய் இருக்கிறாய்...?

"ஆனந்தக் கூத்தாடும் நீலகண்டனே! என் நெஞ்சில் கால்பதித்து எப்பொழுதுஎன்னுள் இறங்கி என்னை ஆட்கொள்வாய்?' என்று வள்ளலார் இறைவனிடம்வேண்டுகிறார்.

நாமும் சிவபெருமானைச் சரணடைந்து, மூப்புக்குக் காரணமான பிணி நீக்கிபெருவாழ்வு பெற முனைவோம். ஸ்ரீசைலத்தில் அருள்பாலித் துக் கொண்டிருக்கும்சிவனை வணங்கி, அத் தலத்தில் ஸ்தலவிருட்சமாய் எழுந்தருளியிருக்கும்கண்டங்கத்திரியை முழுமையாய் சரணடைந்து, முக்திக்கு வழியில்லையென்றாலும்நோய் நீங்கி சக்தி பெற முனைவோம்; வாருங்கள்.

ஆஸ்துமா குணமாக...

ஆஸ்துமாவை முழுமையாகக் குணப் படுத்தும் அற்புதத்திறன் கண்டங்கத்தரிக்குஉண்டு. சமீபத்தில் எனது எழுத்துக்களை இடைவிடாது வாசிக்கும் வாசகர் ஒருவர்ஒரு கடிதம் எழுதியிருந்தார். தான் ஆஸ்துமா எனப் படும் இரைப்புநோயில்மிகவும் துன்புறுவதாக வும்; தனக்கு ஏதேனும் சித்த மருந்துகளைப்பரிந்துரைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் இந்தநோயைப் பற்றி ஒரு அற்புதமான பழமொழியொன்றையும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

"நித்திய கண்டம் பூரண ஆயுள்' -இதுவே அந்தப் பழமொழியாகும். அதாவது தான்படும் தினசரி வேதனையானது மரணத்திற்கு ஒப்பானது. ஆனால் பூரண ஆயுளுடன்இருப்பதாகவும் அர்த்தமாகிறது.

அந்த வாசகருக்காகவே மானுடனுக்கு உண்டாகும் கண்டத்தை கத்திரிபோல் நீக்கும்கண்டங்கத்திரி பற்றிய மருத்துவ உண்மைகளைக் குறிப்புகளாக வரைந்துள்ளேன்.

கண்டங்கத்திரி இலை, பூ, காய், வேர் ஆகிய வற்றை வகைக்கு 20 கிராம்எடுத்துக் கொள்ள வும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்த ரத்தை,அதிமதுரம், சீரகம், சோம்பு, கடுஞ்சீரகம், ஜாதிக்காய், சடாமாஞ்சில்,சதகுப்பை, ஓமம், மாசிக்காய், கற்கடகசிருங்கி, ஏலக்காய், கடுக்காய்,இந்துப்பு, பச்சைக் கற்பூரம் போன்றவற்றை வகைக்கு பத்து கிராம் கலந்து,அனைத்தையும் தூள் செய்து பத்திரப்படுத்தவும்.

இதில் ஐந்து கிராம் அளவுபொடியை எடுத்து இரண்டு டம்ளர் (400 மிலி) நீருடன்சேர்த்து கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து சிறிது பனங்கற்கண்டுசேர்த்துச் சுவை யாக, காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர,சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தலைவலி, தலைபாரம், தும்மல்,மூக்கடைப்பு, பசியின்மை போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கி, நித்தியசௌக்கியம் மற்றும் பூரண ஆயுளுடன் வாழலாம்.

பல்வலி குணமாக...

பல்வலி பல்வேறு காரணங்களால் வரலாம். தலைசார்ந்த நோய்கள், சைனஸ்,நீர்கோர்வை நோய்களின் வெளிப்பாடாய் பல்வலி வரலாம். நுரையீரல் மற்றும்இதயநோய்களின் அறிகுறி யாய்கூட பல்வலி வருவதுண்டு. பற்களின் உறுதியானநிலைக்கு சுண்ணாம்பு எனப்படும் கால்சியமே ஆதாரசக்தியாகும். அத்தகையசுண்ணாம்பில் ஏற்படும் தொற்றுகளாலேயே பல்வலி மற்றும் பற்களைச் சார்ந்தநோய்கள் உண்டாகின்றன. தொற்றுகளைக் களைவதில் எம்பெருமான் சிவனின்அருட்கடாட்சம் பெற்ற கண்டங்கத்திரியே முன்னோடியாகும்.

100 கிராம் கண்டங்கத்திரி விதையைத் தூள் செய்து 100 கிராம் சாம்பிராணித்தூளுடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் தேவை யான அளவு பொடியைநெருப்பிலிட்டு, அதில் வரும் புகையை பற்களில் படும்படி நுகர, பல்வலி உடனேகுணமாகும்.

பற்கள் சார்ந்த நோய்களுக்கு அதிசயமாய் குணமளிக்கும் பற்பொடி ஒன்றை நீங்களே வீட்டில் தயார் செய்துகொள்ளுங்கள். இதோ அதற்கான செய்முறை:

கண்டங்கத்திரி விதை, தாளிசபத்திரி, கொய்யா இலை, ஆலம்பட்டை, அரசம்பட்டை,வாய்விளங்கம், கொட்டைப்பாக்கு ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கித் தூள்செய்து கொள்ளலாம். இத்துடன் காவிக்கல், பச்சைக் கற்பூரம், இந்துப்புபோன்றவற்றை வகைக்கு பத்து கிராம் அளவில் எடுத்து ஒன்றாகத் தூள் செய்துநன்கு கலந்து பத்திரப்படுத்தவும். இதைக் கொண்டு பல் துலக்கிவர பல்வலி,பல்கூச்சம், ஈறு அரிப்பு, ஈறுகளில் உண்டாகும் புண் போன்றவை குணமாகும்.

தலைவலி குணமாக...

கண்டங்கத்திரி இலையை அரைத்து 30 மி.லி. அளவில் சாறெடுத்து, அதில் சிறிதுபச்சைக் கற்பூரத்தைக் கலந்து நெற்றியில் தேய்த்து, சிறிது தலை உச்சியிலும்இதமாய்த் தேய்த்துவிட தலைவலி உடனே தீரும். அடிக்கடி தலைவலியால்அவதிப்படுபவர்கள் இங்கே சொல்லப்படும் தைலத்தைக் காய்ச்சி தலைக்குக்குளித்துவர, தலைவலி முற்றிலுமாய் குணமாகும்.

கண்டங்கத்திரி வேர், சுக்கு, சித்தரத்தை, சோம்பு ஆகியவற்றை வகைக்கு 20கிராம் எடுத்து பால் விட்டரைத்து, 300 மி.லி. நல்லெண்ணெ யிலிட்டு பதமுறக்காய்ச்சி இறக்கிவிடவும். இந்த எண்ணெய்யைத் தேய்த்துத் தலைமுழுகி வர,தலைவலி, தலைபாரம், தும்மல், சைனஸ் போன்ற குறைபாடுகள் தீரும்.

மூட்டுவலி குணமாக...

கண்டங்கத்திரி இலைச்சாறு, வாத நாராயணா இலைச்சாறு, முடக்கத்தான் சாறுஆகியவற்றை வகைக்கு 100 மி.லி. எடுத்து, அத்துடன் ஒரு லிட்டர் நல்லெண்ணெய்சேர்த்து தைலபதமாய்க் காய்ச்சி இறக்கி, பின்னர் 50 கிராம் பச்சைக்கற்பூரம்தூள் செய்து சேர்க்கவும். இந்த தைலத்தில் தேவையான அளவு எடுத்து சூடுசெய்து கால்மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்துவர,சகலவலிகளும் உடனே குணமாகும்.

இருமல் விலக...

கண்டங்கத்திரி வேர் பத்து கிராம், திப்பிலி 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர்தண்ணீர் சேர்த் துக் கசாயமிட்டு, 60 மி.லி. அளவில் காலையும் மாலையும்சாப்பிட்டு வர, எப்பேர்ப்பட்ட இருமலும் தணியும்.

சகல காய்ச்சலும் விலக...

கண்டங்கத்திரி வேர், கண்டு பாரங்கி, கோரைக்கிழங்கு, சுக்கு, சிறுவழுதலைவேர் முதலியவற்றை வகைக்கு பத்து கிராம் அளவில் எடுத்து, ஒரு லிட்டர்தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து நாலில் ஒரு பங்காய்ச் சுண்டச்செய்து, வேளைக்கு 60 மி.லி. அளவு சாப்பிட்டு வர சகல காய்ச்சல்களும் தீரும்.

கண் பார்வை தெளிவு பெற...

கண்டங்கத்திரிப்பூக்களை 100 கிராம் அளவு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.அத்துடன் சீரகம், திப்பிலி, நெல்லிமுள்ளி ஆகியவற்றை சேர்த்து தூள் செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு பொடியைப் பாலில் கலந்து 48 நாட்கள்(ஒரு மண்டலம்) தொடர்ந்து சாப்பிட்டு வர கண்பார்வை கூர்மையாகும்.

கருத்துகள் இல்லை: