திருக்குறள்

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.!

ஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.!

* அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.

* இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.

* காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

* ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார்.

* உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது.

* ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

* இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

* படிப்புத் திறனையும், நினைவாற்றலையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து


எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து 

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில்  இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.    

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.
  • எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து 

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.


தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம். 

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

பிரசவத்திற்கு பின்பு...

பிரசவத்திற்கு பின்பு...

*ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் தாய்மைப் பருவம். குழந்தை பெற்ற பிறகு, அது சுகப் பிரசவமானால் 1 மாதமும், சிசேரியன் என்றால் 3 மாதங்களும் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்த, பெண், முழுமையாக மனதளவிலும், உடலளவிலும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 18 மாதங்கள் அவசியம் என்கிறது லேட்டஸ்ட் மருத்துவக் குறிப்பு.

*சிசிசேரியன் என்றாலும் சுகப்பரசவம் என்றாலும் சரி அதிக கணம் கொண்ட பொருட்களை தூக்குவது கூடாது.ஏனென்யால் அது உடல் நிலை பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.குழந்தைக்கு முதலில் தாய் பால் தான் தரவேண்டும்.தாய்பாலைவிட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயின் உடலோடு இணைத்து அந்த சூட்டில் குழந்தையை படுக்க வேண்டும்

*குழந்தை பெற்ற உடன் அனேகப் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளவு சரேலெனக் குறைகிறது. உடல் எடை தாறுமாறாக மாறுகிறது. சருமம் பொலிவிழக்கிறது. அவர்களது ஒட்டுமொத்த தோற்றமுமே மாறிப் போகிறது. 18 மாதங்களுக்குப் பிறகே எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்புமாம். அதுவரை பொறுமை அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Like · 

நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்

நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்
அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால்ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும். அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்று போட விரைவில் வலி தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

அத்திப்பழத்தை அப்படியே காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து- தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.

அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.

அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.

• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.


மணத்தக்காளி கீரை..!

மணத்தக்காளி கீரை..!

மணத்தக்காளி கீரைக்கு.. மனத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என்ற பெயர்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

மணத்தக்காளி கீரையில் புரதம் (5.9 சதவீதம்), கொழுப்பு(1.0 சதவீதம்), சுண்ணாம்பு(210 மி.கி), பாஸ்பரஸ்(75 மி.கி), இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகிவையும், மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), டானின் (3.60 சதவீதம்), சப்போனின்(9.10 சதவீதம்) ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) என ஏராளமான தாது உப்புகளும், உயிர் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.

இத்தனை சிறப்பான மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவதால் குடல்புண், நாக்குப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வாய் வேக்காடு, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்.

ஆனந்தநிலை

வேண்டுதல் வேண்டாமை

வேண்டும் என்ற ஆசை துடங்கி நிறைவேறி வேண்டாமை நிலையை அடைகிறது. பின்னர் வேறு ஒரு வேண்டும் என்ற ஆசை துடங்கி வேண்டாமை நிலையை அடைகிறது. அப்படி பார்த்தல் வேண்டாமை நிலையே நிரந்தர உண்மையாக உள்ளது. அதுவே நாம் இயற்கை இயல்பாக உள்ளது.

நாம் இந்த உண்மை அறியாமையால் வேண்டும் என்ற நிரந்திரம் இல்லாத ஆசைநிலையில் துன்பநிலையில் அகப்பட்டு போகிறோம். வேண்டாம் என்ற ஆசையற்ற ஆனந்தநிலையே சுத்த அறிவுநிலை ஆகும். நாம் எப்போதும் ஆனந்தநிலயிலேயே இருக்கிறோம் என்பதை மறந்து அறியாமையால் நம்மிடையே உள்ள ஆனந்தத்தை வெளியே பொருள்கள் என்னும் மாயை மூலம் தேடி அடையமுடியாமல் சிக்கி ஆனந்தத்தை அறியாமையால் இழந்து தவிக்கிறோம் ஜகம் அனைத்தும் மாயையே அதனால் இன்பதுன்பம் ஏற்படுமே தவிர ஆனந்தம் ஏற்படாது.

நாம் எப்போதும் ஆனந்த நிலையான சுத்தசிவநிலையில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்து ஆசைபடாமல், மொவுனமாக, மொனமாக, சும்மா இருப்பதே சுகம் . அதுவே நிரந்திர அறிவுநிலை ஆகும். வேண்டாம் என்ற உண்மை அறிவே தத்துவங்களை உடைத்து சுத்த சிவநிலையாம் சித்திநிலையை அடைய உதவும்.
·