ஆனந்தநிலை
வேண்டுதல் வேண்டாமை
வேண்டும் என்ற ஆசை துடங்கி நிறைவேறி வேண்டாமை நிலையை அடைகிறது. பின்னர் வேறு ஒரு வேண்டும் என்ற ஆசை துடங்கி வேண்டாமை நிலையை அடைகிறது. அப்படி பார்த்தல் வேண்டாமை நிலையே நிரந்தர உண்மையாக உள்ளது. அதுவே நாம் இயற்கை இயல்பாக உள்ளது.
நாம் இந்த உண்மை அறியாமையால் வேண்டும் என்ற நிரந்திரம் இல்லாத ஆசைநிலையில் துன்பநிலையில் அகப்பட்டு போகிறோம். வேண்டாம் என்ற ஆசையற்ற ஆனந்தநிலையே சுத்த அறிவுநிலை ஆகும். நாம் எப்போதும் ஆனந்தநிலயிலேயே இருக்கிறோம் என்பதை மறந்து அறியாமையால் நம்மிடையே உள்ள ஆனந்தத்தை வெளியே பொருள்கள் என்னும் மாயை மூலம் தேடி அடையமுடியாமல் சிக்கி ஆனந்தத்தை அறியாமையால் இழந்து தவிக்கிறோம் ஜகம் அனைத்தும் மாயையே அதனால் இன்பதுன்பம் ஏற்படுமே தவிர ஆனந்தம் ஏற்படாது.
நாம் எப்போதும் ஆனந்த நிலையான சுத்தசிவநிலையில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்து ஆசைபடாமல், மொவுனமாக, மொனமாக, சும்மா இருப்பதே சுகம் . அதுவே நிரந்திர அறிவுநிலை ஆகும். வேண்டாம் என்ற உண்மை அறிவே தத்துவங்களை உடைத்து சுத்த சிவநிலையாம் சித்திநிலையை அடைய உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக