திருக்குறள்

வியாழன், 5 செப்டம்பர், 2013

மாரடைப்பைத் தடுக்க இதோ புது மருந்த

மாரடைப்பைத் தடுக்க இதோ புது மருந்த மனிதர்கள் நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது, அவர்களது இதயத்திற்குப் போகும் இரத்தக் குழாய்கள் மிகவும் விரிவடைந்து, ரத்தக் குழாயில் தாராளமாய் ரத்தம் ஓடிடவும், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், அந்தச் சிரிப்பு (நமக்கு) மனிதர்களுக்குப் பெரிதும் உதவிடு கிறது என்கிறார்கள் இத்தாலி நாட்டின் பிஸா (Pisa) பகுதியில் உள்ள Institute of Chemical Philsiology என்ற அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி மூலம் - மாரடைப்பு வராமல் தடுக்க ஒரு புதிய மருந்தாகி இந்த வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீசில் உள்ள European Society of cardialogists என்ற அமைப்பு மாநாட்டில் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தனர். இதயநோயாளிகளில் 78.5 விழுக் காடு உள்ளவர்கள் இதய நோயி லிருந்து விடுபட்டிருப்பதற்குக் காரணம், கோபப்படாமல் அவர்கள் வாழுவது தான்! இன்னொரு கல்வியகத்தில் கோபம் வந்தவர்களை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களில் 57.4 சதவிகிதம்தான் வாழுகிறார்கள். இதயநோய் தாக்கும் நிலை அவர்கள் பலருக்கு உண்டு! அமெரிக்க பால்டிமோர் மருத்துவமனை ஆய்விலும் இத்தாலிய ஆய்வினையே செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். இரத்தக் குழாய் மட்டுமா விரிவடைகிறது - நம் மனங்களும்கூடத்தான்! மருந்துகள் தரும் சிகிச்சைகளை விட, மன மகிழ்ச்சி, இறுக்கத்தினை எட்டி நில் என்று சொல்வதுபோல் எப்போதும் கல கலப்பான சிரிப்பு மன்னர்களாக வாழுப வர்கள் ஆயுள் குறிப்பாக இதயநோய் வந்தபிறகும்கூட அவர்கள் ஆயுள் நீளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார் டில்லி எஸ்கார்ட்ஸ் (நுளஉடிசவள) மருத்துவ மனையின் பிரபல இதய சிகிச்சை டாக்டர் அசோக் சேத் அவர்கள்! அவர் முக்கிய அறிவுரை கூறுகிறார் - இதயநோயாளிகள் மட்டுமல்ல; பொது வான மனிதர்கள் எவரும் கோபம் கொள்ளுவதால் மாரடைப்பு விரைவுடன் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கையாகக் கூறுகிறார். நமது சுரப்பிகள் (Adrenaline and Rasconstrictor) ஹார்மோன்கள், ரத்தக் குழாய்களைச் சுருக்கி, இரத்த ஓட்டத் திற்குத்தான் தடை ஏற்படுத்தி மாரடைப்பு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றனவாம்! 228 நோயாளிகளில் 200 பேர்கள் ஆண்கள். இதில் 51 பேர்கள் இதய நோய் - மாரடைப்புக்கு ஆளானவர்கள் 28 மரணங்கள் 23 மாரடைப்பு நோயாளிகள் மாறிய நிலை! வள்ளுவர் சொன்ன சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி எவ்வளவு அறிவி யல் பூர்வக் கருத்து என்பதை எண் ணுங்கள். மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும் - குறள் (303) இதன் பொருள்: ஒருவன், யாரொரு வரிடத்திலும் சினங்கொள்ளாமல் அந்தச் சினத்தை அறவே மறந்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்தச் சினத்தால் தீமையான விளைவுகள் தாம் அவனுக்கு ஏற்படும். நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற - குறள் (304) ஒருவனது முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும் அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அடியோடு அழிக் கின்றன. சினத்தைவிட, அவனுக்குப் பகையாக விளங்கும் பொருள் வேறு ஏதொன்றும் இருக்க முடியாது. வள்ளுவர் சிந்தனை எப்படிப்பட்ட அறவியல் சிந்தனையாக உள்ளது என்பது எல்லையற்ற மகிழ்ச்சிக்குரியது அல்லவா?
தைராய்டு கோளாறுகள் உணவு டிப்ஸ் தைராய்டு நோய் உணவு குறிப்புகள் - உணவு, காய்கறிகள், மீன், முழு தானியங்கள், கோழி, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், பழங்கள் நிறைந்த இருக்க வேண்டும் தைராய்டு நோய் உணவு குறிப்புகள் - உணவு, பழங்கள் நிறைந்த இருக்க வேண்டும் காய்கறிகள், மீன், முழு தானியங்கள், கோழி, பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ். வழக்கமாக மருந்து சரியான அளவு எடுத்து, தைராய்டு பரிசீலனைக்கு செல்ல. தைராய்டு செயல்பாடு தொடர்ந்து மாற்ற முடியும் எனவே குறைந்தது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஆய்வு வேண்டும். நீங்கள் தைராய்டு பாதிக்கப்படுகின்றனர் இருந்தால் உடல் செயல்பாடு குறிப்பாக முக்கிய ஏனெனில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கவும். இது வளர்சிதை முடுக்கி மற்றும் எடை இழப்பு அதிகரிக்க தேவையான உள்ளது. இது தினசரி உடற்பயிற்சி 30-45 நிமிடங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் இருந்தால் வழக்கமான உடல் செயல்பாடு மட்டுமே 10 நிமிடங்கள் ஒரு நாள் செயல்பாட்டை அதிகரிக்க உதவியும். அவர்கள் தனிப்பட்ட இருந்து தனிப்பட்ட மாறுபட்டு, மேலும் காலப்போக்கில் மாற்ற முடியும் என்பதால், உங்கள் உடல் தேவைகளை கற்கவும். தைராய்டு செயல்பாடு நன்மை என்று உணவுகள்: கேரட், கீரை, apricots, அஸ்பாரகஸ், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், சூரியகாந்தி விதைகள், முழு தானியங்கள், வாழைப்பழங்கள், மீன் எண்ணெய். உங்கள் சாப்பாட்டுக்கு இந்த உணவுகள் சேர்க்கவும். சேர்மங்கள் goitrogenim நிறைந்த உணவுகள் உங்கள் உட்கொள்ளும் குறைக்கவும் முட்டைக்கோசு, கோசு, ப்ரோக்கோலி, கடுகு (கடுகு), லிமா பீன்ஸ், ஆளி விதை, இனிப்பு உருளைக்கிழங்குகள், வேர்கடலை, சோயா தயாரிப்புகள்: யாருடைய உட்கொள்ளும் உணவுகள் ஏனெனில் அயோடின் உறிஞ்சுதல் ஒன்றும் சாத்திய, குறைக்கப்பட வேண்டும். 2-3 முறை ஒரு வாரம் இந்த உணவுகள் உங்கள் உட்கொள்ளும் குறைக்கவும், ஆனால் தேவை முற்றிலும் வெளியேற்றப்படுவதை முடியாது. (காபி, கோகோ கோலா, சில டீஸ்) காஃபின் உயர் பானங்களை தவிர்க்கவும்; அவர்கள் தைராய்டு செயல்பாட்டை பாதிக்கும் ஏனெனில் புகை மற்றும் மது போன்ற தூண்டிகள் தவிர்க்கவும்.

புதன், 28 ஆகஸ்ட், 2013

பித்த வெடிப்பு

பித்த வெடிப்பு

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்…..

தசை தளர்வை நீக்கும் சீமைச்சாமந்தி.!

தசை தளர்வை நீக்கும் சீமைச்சாமந்தி.!
குட்டையான செடியில் பூக்கும் மலர்களைக் கொண்ட சீமைச்சாமந்தி(Chamomile) மருந்திற்கு பெரிதும் பயன்படுகிறது.. புதிய மற்றும் உலர்ந்த சீமைச்சாமந்தியின் பூக்கள் தேநீர் தயாரிக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு சுகாதார நலன்களை கொண்டுள்ளது.

டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு ,அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சீமைச்சாமந்தியின் பூக்களில் தயாரிக்கப்படும் தேநீர் தசை தளர்வை நீக்கவும், மனதை ஆறுதல் படுத்தவும் உதவுகிறது. சீமைச்சாமந்தியின் தேநீர் தூக்கம் வராமல் அவதிபடுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இப்பூக்களின் தேநீரை தினசரி எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்.

இதில் ஆக்ஸிஜனேற்ற பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளது. சீமைச்சாமந்தியின் தேநீர் அழற்சி விளைவித்தலுக்கு எதிரான முகவர் மற்றும் இயற்கையாக பாக்டீரியாவை எதிர்க்கும் சக்திகளை கொண்டுள்ளது. தேநீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

குளிர்ந்த அல்லது சூடான நிலையிலும் தேநீர் செய்து நீங்கள் பருகலாம். நீங்கள் சுவையுடன் இருக்க வேண்டும் என விரும்பினால் தேநீருடன் தேன் அல்லது எலுமிச்சை பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று கப் தேநீர் பருகுவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

சீமைச்சாமந்தியின் தேநீரை கர்ப்பிணிபெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் காஃபின் கலந்திருப்பதால் கர்ப்பிணியின் கர்ப்பபையை சுருக்கும் வேலையை தேநீர் தூண்டுகிறது. ஆதலால் இது கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. மேலும் ஆஸ்துமா, அலர்ஜி, மற்றும் உணர்வு திறனை ஏற்படுத்தும் தோலை கொண்டவர்கள் தேநீர் மற்றும் மலர்களைக்கூட சுவாசிக்ககூடாது.