திருக்குறள்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மார்பக புற்றுநோய் என் பார்வையில்

மார்பக புற்றுநோய் என் பார்வையில்:
குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம். 
பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 
 மார்பகத்தில் சதைக் கோளங்கள் போன்ற வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் 80 சதவீதக் கட்டிகள் கேன்சர் கட்டிகள் இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் அறிகுறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினாலோ, கட்டிகளில் வலி இருப்பது போல உணர்ந்தாலோ, வலி இல்லாவிட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அடுத்தகட்டமாக மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள மெமோகிராபி எனப்படும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது.
 இந்த சோதனை மூலம் புற்றுநோயை உறுதி செய்ய முடியும். மேலும் நுண்ணிய ஊசியின் வழியாக கட்டியின் திசுக்களை சேகரித்து ஆய்வுக்கூடத்தில் சோதித்து அதனை உறுதி செய்து கொள்ளலாம். கேன்சர் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகளவில் ஹார்மோன் மாத்திரை உட்கொள்பவர்கள், மாதவிலக்கு காலத்தில் மார்பில் வரும் மாற்றத்துக்கு சரியாக சிகிச்சை எடுக்காதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குறைந்த வயதில் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியவர்கள், எப்போதும் மன வருத்தத்தில் இருப்பவர்கள், அதிக உதிரப்போக்கு, அதிக வெள்ளைப் போக்கு போன்ற பிரச்னையை முறையாக கவனிக்காமல் விட்டவர்கள், தைராய்டு பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காதவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பரம்பரை காரணங்களாலும் வரலாம்.

 பாதுகாப்பு முறை: 

 பெண்கள் எப்போதும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். தாய்மைக் காலத்தில் பெண்கள் தாய்ப்பால் தருவது மிக முக்கியமானது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை. இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. நாள்பட்ட கேன்சருக்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ஆரம்பத்தில் கேன்சர் கட்டிகள் கண்டறியப்பட்டால் ஹோமியோபதியில் கட்டியை கரைப்பதற்கான மருந்துகள் உள்ளன. மேலும் கேன்சர் பாதிப்பை அடுத்த உறுப்புகளுக்கு பரவாமல் தடுக்க முடியும். கெமிக்கல் கலப்புள்ள உணவு வகைகளை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

 தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. முளை கட்டிய பயறு, நெல்லிக்காய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது சிறந்தது. சுகாதாரமான குடிநீரும் அவசியம். மேலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியும். 
 உணவு:
 சேமியா டால் பாத்: சேமியா ஒரு கப் நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு 50 கிராம் எடுத்து அதில் சீரகத்தூள், பூண்டு இரண்டு பல், வெந்தயம் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் தாளித்து பின்னர் வெங்காயம்4, தக்காளி1, பச்சை மிளகாய்2 சேர்த்து வதக்கவும். இத்துடன் துவரம்பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் சேமியா சேர்த்து வெந்தபின் இறக்கவும். இதில் கார்போஹைட்ரேட், மினரல்கள் கிடைக்கும். ரவா அடை: 2 முட்டையை உடைத்து ஊற்றி, அதில் அரைக்கிலோ வெள்ளை ரவை சேர்த்துக் கலக்கவும். 20 சின்ன வெங்காயம் மற்றும் 3 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்க்கவும். கெட்டியான ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு போட்டு அடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை உடனடியாக தோசைக்கல்லில் அடையாக சுட்டு எடுக்கலாம். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. கத்தரி வடை: 100 கிராம் கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். கடலைப் பருப்பு மற்றும் முளை கட்டிய 50 கிராம் பச்சைப் பயறு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பொடியாக நறுக்கிய 150 கிராம் கத்தரிக்காய் மற்றும் 6 பச்சைமிளகாயைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் 50 கிராம் கெட்டித் தயிர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 
 உணவு முறை:
 மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்?  பொதுவாக 50 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருகிறது. எச்.ஈ.ஆர்.2 என்ற ஜீனும் இதற்கு ஒரு காரணமாகிறது. தாய்மை அடையாத பெண்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவத்தில் ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். இதே போல் பால் மற்றும் பால் பொருட்கள், நெய், வெண்ணெய், டீ, காபி, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, பிஸ்தா தவிர்க்கவும். பழ வகையில் பப்பாளி தவிர்க்கவும். காய்களில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். முட்டைக்கோஸ், கேரட், பூசணி, சர்க்கரைப் பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். ஆப்பிள், செர்ரி, மாதுளை, திராட்சை மற்றும் தர்பூசணிப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகளில் சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். அசைவ வகையில் கொழுப்பு இல்லாத எலும்பு உள்ள சிக்கன் மற்றும் முட்டை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 

  பாட்டி வைத்தியம்
பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளு க்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். மகிழம் பூவை பறித்து வைத்து கட்டிக் கொண்டால் மார்புகள் எடுப்பான தோற்றம் அளிக்கும். மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத் திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும். இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்னைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம். அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சை யாக சாப்பிடுவது நல்லது. கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

மாரடைப்பைத் தடுக்க இதோ புது மருந்த

மாரடைப்பைத் தடுக்க இதோ புது மருந்த மனிதர்கள் நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது, அவர்களது இதயத்திற்குப் போகும் இரத்தக் குழாய்கள் மிகவும் விரிவடைந்து, ரத்தக் குழாயில் தாராளமாய் ரத்தம் ஓடிடவும், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், அந்தச் சிரிப்பு (நமக்கு) மனிதர்களுக்குப் பெரிதும் உதவிடு கிறது என்கிறார்கள் இத்தாலி நாட்டின் பிஸா (Pisa) பகுதியில் உள்ள Institute of Chemical Philsiology என்ற அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி மூலம் - மாரடைப்பு வராமல் தடுக்க ஒரு புதிய மருந்தாகி இந்த வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீசில் உள்ள European Society of cardialogists என்ற அமைப்பு மாநாட்டில் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தனர். இதயநோயாளிகளில் 78.5 விழுக் காடு உள்ளவர்கள் இதய நோயி லிருந்து விடுபட்டிருப்பதற்குக் காரணம், கோபப்படாமல் அவர்கள் வாழுவது தான்! இன்னொரு கல்வியகத்தில் கோபம் வந்தவர்களை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களில் 57.4 சதவிகிதம்தான் வாழுகிறார்கள். இதயநோய் தாக்கும் நிலை அவர்கள் பலருக்கு உண்டு! அமெரிக்க பால்டிமோர் மருத்துவமனை ஆய்விலும் இத்தாலிய ஆய்வினையே செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். இரத்தக் குழாய் மட்டுமா விரிவடைகிறது - நம் மனங்களும்கூடத்தான்! மருந்துகள் தரும் சிகிச்சைகளை விட, மன மகிழ்ச்சி, இறுக்கத்தினை எட்டி நில் என்று சொல்வதுபோல் எப்போதும் கல கலப்பான சிரிப்பு மன்னர்களாக வாழுப வர்கள் ஆயுள் குறிப்பாக இதயநோய் வந்தபிறகும்கூட அவர்கள் ஆயுள் நீளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார் டில்லி எஸ்கார்ட்ஸ் (நுளஉடிசவள) மருத்துவ மனையின் பிரபல இதய சிகிச்சை டாக்டர் அசோக் சேத் அவர்கள்! அவர் முக்கிய அறிவுரை கூறுகிறார் - இதயநோயாளிகள் மட்டுமல்ல; பொது வான மனிதர்கள் எவரும் கோபம் கொள்ளுவதால் மாரடைப்பு விரைவுடன் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கையாகக் கூறுகிறார். நமது சுரப்பிகள் (Adrenaline and Rasconstrictor) ஹார்மோன்கள், ரத்தக் குழாய்களைச் சுருக்கி, இரத்த ஓட்டத் திற்குத்தான் தடை ஏற்படுத்தி மாரடைப்பு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றனவாம்! 228 நோயாளிகளில் 200 பேர்கள் ஆண்கள். இதில் 51 பேர்கள் இதய நோய் - மாரடைப்புக்கு ஆளானவர்கள் 28 மரணங்கள் 23 மாரடைப்பு நோயாளிகள் மாறிய நிலை! வள்ளுவர் சொன்ன சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி எவ்வளவு அறிவி யல் பூர்வக் கருத்து என்பதை எண் ணுங்கள். மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும் - குறள் (303) இதன் பொருள்: ஒருவன், யாரொரு வரிடத்திலும் சினங்கொள்ளாமல் அந்தச் சினத்தை அறவே மறந்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்தச் சினத்தால் தீமையான விளைவுகள் தாம் அவனுக்கு ஏற்படும். நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற - குறள் (304) ஒருவனது முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும் அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அடியோடு அழிக் கின்றன. சினத்தைவிட, அவனுக்குப் பகையாக விளங்கும் பொருள் வேறு ஏதொன்றும் இருக்க முடியாது. வள்ளுவர் சிந்தனை எப்படிப்பட்ட அறவியல் சிந்தனையாக உள்ளது என்பது எல்லையற்ற மகிழ்ச்சிக்குரியது அல்லவா?
தைராய்டு கோளாறுகள் உணவு டிப்ஸ் தைராய்டு நோய் உணவு குறிப்புகள் - உணவு, காய்கறிகள், மீன், முழு தானியங்கள், கோழி, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், பழங்கள் நிறைந்த இருக்க வேண்டும் தைராய்டு நோய் உணவு குறிப்புகள் - உணவு, பழங்கள் நிறைந்த இருக்க வேண்டும் காய்கறிகள், மீன், முழு தானியங்கள், கோழி, பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ். வழக்கமாக மருந்து சரியான அளவு எடுத்து, தைராய்டு பரிசீலனைக்கு செல்ல. தைராய்டு செயல்பாடு தொடர்ந்து மாற்ற முடியும் எனவே குறைந்தது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஆய்வு வேண்டும். நீங்கள் தைராய்டு பாதிக்கப்படுகின்றனர் இருந்தால் உடல் செயல்பாடு குறிப்பாக முக்கிய ஏனெனில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கவும். இது வளர்சிதை முடுக்கி மற்றும் எடை இழப்பு அதிகரிக்க தேவையான உள்ளது. இது தினசரி உடற்பயிற்சி 30-45 நிமிடங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் இருந்தால் வழக்கமான உடல் செயல்பாடு மட்டுமே 10 நிமிடங்கள் ஒரு நாள் செயல்பாட்டை அதிகரிக்க உதவியும். அவர்கள் தனிப்பட்ட இருந்து தனிப்பட்ட மாறுபட்டு, மேலும் காலப்போக்கில் மாற்ற முடியும் என்பதால், உங்கள் உடல் தேவைகளை கற்கவும். தைராய்டு செயல்பாடு நன்மை என்று உணவுகள்: கேரட், கீரை, apricots, அஸ்பாரகஸ், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், சூரியகாந்தி விதைகள், முழு தானியங்கள், வாழைப்பழங்கள், மீன் எண்ணெய். உங்கள் சாப்பாட்டுக்கு இந்த உணவுகள் சேர்க்கவும். சேர்மங்கள் goitrogenim நிறைந்த உணவுகள் உங்கள் உட்கொள்ளும் குறைக்கவும் முட்டைக்கோசு, கோசு, ப்ரோக்கோலி, கடுகு (கடுகு), லிமா பீன்ஸ், ஆளி விதை, இனிப்பு உருளைக்கிழங்குகள், வேர்கடலை, சோயா தயாரிப்புகள்: யாருடைய உட்கொள்ளும் உணவுகள் ஏனெனில் அயோடின் உறிஞ்சுதல் ஒன்றும் சாத்திய, குறைக்கப்பட வேண்டும். 2-3 முறை ஒரு வாரம் இந்த உணவுகள் உங்கள் உட்கொள்ளும் குறைக்கவும், ஆனால் தேவை முற்றிலும் வெளியேற்றப்படுவதை முடியாது. (காபி, கோகோ கோலா, சில டீஸ்) காஃபின் உயர் பானங்களை தவிர்க்கவும்; அவர்கள் தைராய்டு செயல்பாட்டை பாதிக்கும் ஏனெனில் புகை மற்றும் மது போன்ற தூண்டிகள் தவிர்க்கவும்.

புதன், 28 ஆகஸ்ட், 2013

பித்த வெடிப்பு

பித்த வெடிப்பு

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்…..